பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வல்லிக்கண்ணன் தங்களுக்குரிய உயர்நிலையைப் பெறவில்லையே- பெற முடியவில்லையே- என்று குமைந்து குமுறிக் கொதிப் புறும் பெருங்கவிக்கோவின் சொற்களில் உணர்ச்சியும் வேகமும் பொங்கிப் பாய்வதை அவருடைய கவிதைகளில் பல இடங்களில் காண முடிகிறது. மக்களை உயர விடாமல் தடுத்து நிற்கிற, கெடுத்து விடுகிற, சிறுமைகள் பலவற்றையும் அவர் ஆவேசமாகச் சாடுகிற போது அவருடைய கவிதைகள் தனி உயிர்ப்பும் உணர்வும் பெற்றுக் கனல்கின்றன. ‘கரவுடையார் நெஞ்ச மென்றன் கவிதையினால் இளக வேண்டும் இரந்துண்ணும் தீமை உலகில் இல்லாமல் ஆக வேண்டும் வறுமை யெலாம் நீங்க வேண்டும் வையகமே பகிர்ந் துண்ணும் தறுகண்மை வாழ வேண்டும் தலையான பண்பு வேண்டும் பட்டினிகள் ஒழிய வேண்டும் பகிர்ந்துண்டே வாழ வேண்டும் கெட்டவர்கள் திருந்த வேண்டும் கேவலங்கள் மறைய வேண்டும்’ என்று உளமாறக் ஆசைப்படும் பெருங்கவிக்கோவின் கவிதைகள் அவருடைய பரந்த மனத்தை, விசால நோக்கை, மனித நேயத்தை, உலகம் தழுவிய உயர் பார்வையை உன்னதக் கொள்கைகளை புலப்படுத்து கின்றன. . அனைத்துக்கும் ஊடாகக் கவிஞரின் தமிழ் அன்புஅன்னைத்தமிழ் மீது அவர் கொண்டுள்ள பக்தி-மிளிர் வதைக் காணலாம்.