பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 15 அளிக்கிறது. அதில் அவருடைய தன்னம்பிக்கையும் ஒலி செய்வதைக் கேட்க முடிகிறது. - - முன்னைத் தமிழே முதன் முதலில் உலகோர்நா தன்னை அசைத்த தண்டமிழே இன்றுவரை உன்னைப் புறம்போக்க உட்பகை மோதிடினும் அன்னைவேலெறிந்தே அடர்வெற்றி கண்டவளே! அம்மா என்னுள்ள ஆலயத்தின் உயிர்ச்சிலையே! செம்மை மகனுன்றன் சேவடியை வணங்குகிறேன்! கூலிக்குப் பாடிக் குளிர்காய்ந்து போகாமல் தாலிக்குப் பொன்போலத் தமிழ்க் கவிதை பாடி - శఙ}€j L D பாலிக்கும் பெருங்கவிக்கோ’ பாடுகிறேன் - --- - - - பாடுகிறேன்! இதை ஒரு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். மூச்சும் தமிழ், பேச்சும் தமிழ், வாழ்வதும் தமிழுக் காக என்று கருதிச் செயல் புரியும் கவிஞர் தனது இதய ஒலியை அழகாகப் பதிவு செய்துள்ளார் இப்படி இந்தப் பிறவி தமிழ்க்காக எடுத்துளேன் ஈங்கெவர் மாற்றவல்லார்-வரும் எந்தப் பிறவி எடுப்பினும் என்பணி இனிய தமிழ்ப் பணியே!-இறை தந்த செல்வம்தனில் சாகாத செல்வமாம் தண்டமிழ்ச் செல்வமொன்றே-உயர் சிந்தை உடல்பொருள் ஆவியெல்லாம் தமிழ்த் தெய்வத் திருவடிக்கே!' தாய்மொழியிடம் அளவிலாப் பற்றுதல் கொண்டிருப் உதனால், அன்னைத் தமிழ்மொழி இன்றுள்ள நிலை