பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒருமைப்பாட்டு உணர்வு தமிழ்மொழி உணர்வும், தமிழ் இனப்பற்றும், மிகுதி யாகப் பெற்றுள்ள கவிஞர் சேதுராமன் குறுகிய நோக்கு டையவர் அல்லர். பரந்த இந்திய உணர்வும் கொண்ட வராக அவர் விளங்குகிறார். "இந்தியா என்பதொரே நாடு-ஒங்கும் இம்யமுதல் குமரிவரை எங்களுடை வீடு! உந்தி எழுந்தே உழைப்பைத்தேடு-என்றும் உலரெங்கில் நமது புகழ் நிலைத்திடவே கூடு!" என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ. வறுமை மிகுந்த நாடாக இருக்கிறது இந்தியா. இந்நாட்டின் எண்ணற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வு வளம் பெறவேண்டும்; இல்லாமைக் கொடுமை ஒழிய வேண்டும் எனும் இதயத் துடிப்புக் கொண்ட கவிஞர். சமுதாய மாறுதலை விரும்பும் முற்போக்குச் சிந்தனை களைத் தனது கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார். ‘உழைத்து ழைத்து உயர்வதற்கே உறுதி நலங்கள் தேற்றுவோம்! உண்மை நீதி அறங்க ளோங்க உள்ள ஏக்கம் மாற்றுவோம்!