பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 g வல்லிக்கண்ணன் படைகிறது. தற்கால உலக நிலை கண்டு. சீற்றம் விளைகிறது. அதன் பயனாக. உலகினை ஏறெடுத்தே உணர்வுடன் பார்க்கின்றாயா? கலகங்கள்! கயமைச் சூழ்ச்சிக் கல்லெறி கொடுமை! ஈதே நலமுறப் பயன்படுத்தும் . நயவஞ்சர் மேலோர் என்றால் நிலமிங்கே எதற்கு? தோழா நிமிர்ந்துவா நெருப்பை வைப்போம்!" இந்த நிலை கண்டு குமுறி எழுந்து, இடித்துரைத்து, நலிவுகள் சாக ஆவன செய்ய வேண்டியவர்கள் படித்த மக்கள் அவர்கள் நிலை எப்படி உள்ளது? கோபத்துடன் சுட்டுகிறார் கவிஞர், "படித்தவர் பதவி யுள்ளார் . பகடைக்காய்! எவராண்டாலும் பிடிப்பதும் பல்லிளித்துப் பேடிபோல் சென்று நன்றாய் நடிப்பதும், அதனால் வாழ்ந்து நாள் கழிப்பதும்தான் வேலை! இடிப்பவர் இல்லை! தோழா எழுந்துவா இடிப்போம் நாமே! மக்களைப்புலியெனச் சீறி,பொங்கும் புயலென மாறி, நிலைமைகளை மாற்றும்படி அறிவுறுத்துகிறார் கவிஞர். "ஓங்கும் உயரிய எண்ணம் கொண்டு ழைப்போம் நன்றே செய்திட நாளும் முயல்வோம் விஞ்சும் நயங்கள் கண்டே நன்மை திளைப்போம்,