பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

கிடைத்த சம்பளம் வீட்டு வாடகைக்கு உதவுகிறது. கடந்ததை நீ மறந்துவிடு, சாவித்திரி!’ என்று உண்ர்ச்சி வசப்பட்டுப் பேசினான் ராமசாமி.

தன் தோழி மாலதிக்காகக் காத்திருந்தாள் சாவித்திரி; தன் கணவனைச் சுடு சொல்லால் ஏசிய அவளுக்குப் பாடம் கற்பிக்கத் துடித்தாள். ஆனால், அவள் எதிர் பார்த்தபடி மாலதி வரவில்லை. அவளுக்குப் பதிலாக, அவளிடமிருந்து கடிதமொன்று வந்தது; பிரித்துப் படிக்கத் தலைப்பட்டாள் சாவித்திரி:

‘அன்புமிக்க தோழி சாவித்திரிக்கு,

உன்னுடைய மகத்தான பொறுமையின் முன் மண்டியிட்டு மன்னிப்பு வேண்டுகிறேன் நான். என்னை நீ மன்னித்துவிடு. சென்ற வாரம் ஹோட்டலில் நான் யாரை ஏசிப் பேசினேனோ அவர்தான் உன் கணவர் என்பதை நேற்று இரவுதான் நான் அறிந்தேன். சிறு வயசு முதற் கொண்டு என்னுள் ஊறியிருந்த நாடகப் பித்தின் காரணமாக நான் நடிக்க ஒப்பந்தமான ஒரு நாடகத்தின் ஒத்திகைக்குப் போய் விட்டு சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். காலங் கடந்த வேளை. ரிக்‌ஷாவில் வந்து கொண்டிருக்கையில், மவுண்ட் ரோடில் சினிமாப் பார்த்துத் திரும்பிய போக்கிரி ஒருவனால் தாக்கப்பட்டேன். நல்ல வேளையாக எனக்கு ஒரு தெய்வம் உதவியது. அந்தத் தெய்வம்தான் உன் கணவர் அவரை அடையாளங் கண்டதும் என் மனம் பதறித் துடித்தது. அவரே சொன்னார் உண்மையை. உன் கணவர் மாத்திரம் இல்லையென்றால், என் நிலை என்ன ஆகியிருக்குமோ? கோடிச் செம்பொன்னுக்கும் மேலான என் ‘பெண்மை’யை ― மானத்தைக் காத்த தெய்வம் உன் கரம் பற்றியவர்! மதிப்