பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

பிடற்கரிய அந்தத் தெய்வத்தின் முன் கின்று சொல்லத் தயங்கிய இன்னொரு உண்மையையும் இப்போது வெளியிடுகிறேன். நீ அன்று கண்ட பணக்காரப் பெண் மாலதி யல்ல நான்; இப்போது நான் ஏழைப் பெண்! ஆனால், வெளிப்பூச்சும் பகட்டும் நாகரீக முலாமும் என்னை யாரிடமும் காட்டிக் கொடுக்கவில்லை. இன்று என்னை நானே உணர்ந்து கொண்டேன். வியாபாரத்தில் ஏற்பட்ட திடீர் நஷ்டம் என் தந்தையைக் கொண்டு சென்று விட்டது. ஆதரவற்றிருந்த என்னை தூரத்து உறவுக்காரர் ஒருவர் பட்டணத்துக்கு அழைத்து வந்தார். என்னூ ஓர் அழகிய இளைஞருக்குத் திருமணம் செய்து வைத்தார். அவர் யார் தெரியுமா? அன்று உன் கணவருக்குப் பதிலாக வந்த இன்னொருவர் ― நாடகக்காரர் போன்றிருந்த குங்குமப் பொட்டுக்காரர் ஒருவர் வந்து நமக்குக் காப்பி கொடுத்தாரே ― அவரேதான் என் கணவர்!...ஆனால், அவர் அந்த ஹோட்டலில் வேலை பார்ப்பதுகூட எனக்குத் தெரியாது. இரவு பகல் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்துக் கொட்டிய பணம் என் ஆடம்பரத்துக்கும் அலங்காரத்துக்கும்தான் கண்டது. நான் நாடகங்களில் நடிப்பதை அவர் வெறுத்தார். ஆனால், அன்று அவர் சொன்ன வார்த்தைகளை இன்று நான் மனப்பூர்வமாய் உணர முடிகிறது. தெய்வத்தின் சக்தி மகத்தானது. என் கண்கள் திறக்க வேண்டுமென்பதற்குத்தான் நேற்று எனக்கு அத்தகைய சோதனை நிகழ்ந்ததோ?... சினிமா பார்த்துத் திரும்பிய உன் கணவர் கார் கிடைக்காமல் நடந்து வரும்படி நேரிட்டதும் என்னேக் காப்பாற்றத்தானே? எல்லாம் விந்தையாய்த்தான் இருக் கிறது. கேற்று என்னைத் தாக்கிய போக்கிரி என் நகைகள் அனைத்தும் ‘போலி’ என்று அறிந்தால், அப்போதே என்னை அழித்திருப்பானே?...என்னையும் என் மானத்தையும் காப்பாற்றி, என் கண்களையும் திறந்துவிட்டு என்னை புதிய மாலதியாக ஆக்கி, என் அன்புக் கணவர்