பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9
உயிர்ப்பரிசு


ற்றைப்பு மட்டிலும் மாலையாகிவிட முடியாது. ஆனுல் ஒரேயொரு நினைவு என்னும் மலர், மணம் கொண்டு மாலையாகத் தொடுத்து நிற்க முடியும்போலும்! அந்த ஒர் எண்ணம் அவனுள் மாலையென நீண்டு, நினைவுப் பூக்களே உதிர்த்துவிட்டது; பூ என்றால், மணம் மண்டிய பூ; பின்னர், மனம் மணக்கக் கேட்க வேண்டிய தில்லையல்லவா? இளமையின் தோற்றுவாய் எழிலுக்குப் பொழிப்புரை சொன்னது; கனவுகளின் காதையிலே கண்ணின் கருமணி கதை உரைத்தது; ஒப்பனை சேர்ந்த நுண்ணிய அழகுக் கோடுகள் காலத்தின் விளையாடலுக் குச் சாட்சியமா?

"அங்காளம்மை!"... காயாம்பூ நினைவு பறிபோனுன்; நித்திலம் உதிர்ந்தது.

"மச்சான்!"... தீபஆவளிக்குக் கட்டியங் கூறிக்கொண்டு விரியத் தொடங்கியிருந்த இருட்செறிவில் ஒளி ஏந்தி வந்தாள் அவள். "வட்டியிலே சோறு கொட்டி ஊர்ப்பட்ட நேர மாயிடுச்சுதுங்க வெரசா வாங்க!"

எட்டடிக் குச்சுக்குள்ளே ஒன்றென ஒட்டிய இரட்டை உள்ளங்களின் அக்தரங்கம் பேசிக்கொண்ட உரையாடலின் உட்பொருளாக அமைந்த பேரமைதியில்