பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

"மச்சான், ஒங்களுக்கும் புதுசு வாங்கியாரணுமாக்கும்!"

"ஆகட்டும், பொன்னு!"

விடிந்தால் தீபாவளியாமே...!

அறந்தாங்கிச்சாலை மடங்கி, முடங்கி, மறுகிக் குறுகி, கடைசியாக அந்த ஒற்றைத் தடத்தில் முற்றுப்புள்ளி கண்டு திருநாளூர் அங்காளம்மன் சந்நிதியிலே பெருமூச் செறிந்தது!

சந்தைக்கு வந்தவர்கள் வழித்துணைக்கு வரமாட்டார்கள். ஆனால், காயாம்பூவுடன் ஒருவன் துணைக்குவந்தான்; காயாம்பூவிடம் காரியமாகவே வந்தான் : 'கடலைக்காய் எம்பிட்டுக்கு இருந்தாலும் அளந்து குடு. நான் மரக்காலுக்கு பதினெட்டுக்காசு மேனிக்குத் தாரேன்!'.

காயாம்பூ மனைவியை நெருங்கி அவளிடம், துணி மூட்டையக் கொடுத்தான். தாழ்வாரத்தில் ஆய்ந்து கொட்டியிருந்த கடலை மணிகளைக் குவித்து குறுணி, பதக்கு என்று முறைபோட்டு அளந்தான்; மொத்தம் ரெண்டு ரூபாயும் ஒன்பது காசுக்குத்தான் தேறுது!" என்று சொன்னான்; பணத்தை எண்ணிக்கொண்டே உள்ளே பாதம் பதித்தான். 'கவுச்சி' நாற்றம் அடம்பிடித்தது.

"மச்சான், உங்களுக்கு ஒண்ணுமே வாங்கக் காணமே ?...."

"நீ புதுப் பொண்ணு; நீ புதிசு கட்டிக்கிறதுதான் நாயம்; அதுதான் எனக்கும் நிம்மதிப்படும்!"

"நீங்க..."

நான் ஆணாப்பொறந்தவன்; கட்டிக்கிட்டங்களை அலங்காரம் செஞ்சுக் கண்குளிரக் காண்றதுதான் எனக்கு