பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

205

வாஸந்தி எழுந்தாள். படுக்கையிலிருந்து எழுந்து அந்த அறையை நோக்கிச் சென்றாள். அதே தருணம், மூர்த்தியும் அந்த நிலைக்கு வந்து சேர்ந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"வாஸந்தி! இனி அந்த வீணேயை நீ தொடவேண்டிய சந்தர்ப்பம் வரவே வராது!’ என்றான் அவன்.

வாஸந்தி அவனுடைய தோள்மீது கையை வைத்து லேசாகச் சிரித்தாள்.

“ஏற்கனவே அது பயன்படாததாகி விட்டது.”

"வாஸந்தி! என்ன சொல்கிறாய்?”

“தாங்கள் அறுத்துவிட்டது இரண்டாவது தந்தி, முதல் தந்தியை நானே.....”

"வாஸந்தி! நீ முந்திக்கொண்டு விட்டாயா?” என்று அவளது தோள்களில் கைவைத்து மூர்த்தி அவளே அன் பான ஆதரவுடன் அணேத்துக்கொண்டான். இருவருக்கும் நிம்மதி பிறந்தமாதிரி இருந்தது! 米