பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


“அத்தை மகள் பார்வதிக்கு,

விதி நம் நேசத்தைப் பிரித்துவிட்டது. நான் உன் மீது கொண்டிருந்த பிரேமைக்கு இலக்காக, என்னுடைய உருவம் பதித்த ஒரு மோதிரத்தை உனக்குப் பரிசளித்திருந்தேனல்லவா? அதை, இனி நீ வைத்திருக்கக் கூடாது. நம் குடும்பங்கள் பிரிந்தது மாதிரி அம்மோதிரத்தையும் உன்னிடமிருந்து பிரித்து அனுப்பிவைக்கவும்.

இப்படிக்கு,
―ராமதாஸ்.”

தன் கணவரின் வைத்தியச் செலவுக்காக, இந்த மோதிரத்தை―காதலின் சின்னமாக கொடுக்கப்பட்ட மோதிரத்தை ரகசியமாக ‘பியூன்’ மூலமாக அடகுவைத்த நிகழ்ச்சி பாம்பாக நெளிந்து சட்டை உரித்துக்கொண்டு பயங்காட்டியது. இதைத் திருப்புவதற்கு இருநூறு வேணும். என்னைப் போலவேதான் அத்தானும் தனக்கு அளிக்கப்பட்ட பரிசு மோதிரத்தை எங்கோ அடகுவைத் திருக்கிறாராம். அதற்கு வேறு இருநூறு வேண்டும். பணம் மொத்தமாகக் கிடைத்தால், பியூனைக் கொண்டு திருப்பி இரண்டு மோதிரங்களையும் உடைமைக்காரர்களான அவ்விருவருக்கும் அனுப்பிவிடவேண்டும்!― காதல், கனவு, நடைமுறை வாழ்க்கை அனைத்துமே புதிராகத் தான் இருக்கின்றன!...இந்த மோதிரத்தை அடகுக்கு அனுப்பியதிலிருந்து, நான் அனுபவித்துவரும் நரகவேதனை ‘இவருக்கு’ - அத்தானுக்கு ஏற்பட்டிருக்கத்தான் வேண்டும்! ...’

பங்களாவில் போய் நின்றாள் பார்வதி, குமாரின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாள். பையன் வந்தான். அவனுடைய தந்தை பெரிய ‘லேவாதேவி’ க்காரர். விசா