பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

ரித்தாள், ஊரில் இல்லையாம். அவளுக்குத் ‘திக்’ கென்றது. கடைசியில் வீட்டின் எஜமானியிடம் தன் கஷ்ட நஷ்டங்களை சாங்கோபாங்கமாக விஸ்தரித்தாள் பார்வதி. எதிர் முகாமிலிருந்து வந்திருந்த ராமதாஸ், தங்கம்மா ஆகிய இருவரது கடிதங்களையும், வெட்கத்தையும் வேதனையையும் உள்ளடக்கியபடி, எடுத்து நீட்டலானாள்.

“ஆபத்துக்கு உதவுவது என் கட்மை, வாத்தியாரம்மா. எனக்காக இல்லையென்றாலும், என் அருமைப் பிள்ளைகளுக்கர்கவேனும் கட்டாயம் உதவுவேன், ” என்று பவ்யமாகவும் பரிவுடனும் கூறிவிட்டு, உள்ளே சென்றாள் வீட்டுத்தலைவி சாரதத்தம்பாள். அவள்திரும்பி வந்ததும், ஒரு கவரை நீட்டினாள். அதில் ரூபாய் எதுவும் இல்லை. இரண்டு மோதிரங்கள் இருந்தன!

கணவனும் மனைவியும் ஆபத்திற்கு அடகு வைக்க ப்யூன் மூலம் அனுப்பிய மோதிரங்கள் இரண்டும் ரகசியமாக ஒரே இடத்திலேயே வந்து சேர்ந்திருக்கின்றன!

“வேலை ரொம்பச் சுளுவாகப் போய்விட்டதல்லவா? இரண்டையும் இப்போதே அனுப்புங்கள்; எங்களுக்குச் சேரவேண்டிய தொகையை உங்கள் வசதிப் பிரகாரம் தாருங்கள் அம்மா!” என்றாள் வீட்டுத் தலைவி.

சாரதத்தம்பாள் தயங்கித் தயங்கி நடந்து, வாத்தியாரம்மா பார்வதியின் மனையைமிதித்தாள். மீண்டும் கலக்கம் மூண்டது. ‘ஊஹூம்’ என்ற பாவனையில் தலையை உலுக்கியவர், கடந்த படிகளைக் கடந்தாள். அவளுடைய உள்ளங்கைக்குள் உள்ளடங்கியிருந்த கடிதம், சிலிர்த்துக் கொண்டு தலையை அசைத்தது.

அது