பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3
சொக்கப் பச்சை

ளத்து மேட்டிலே பொன் விளைந்திருந்தது. மண் தந்த பரிசில் அது. பொன் விளையும் பூமி என்கிறார்களே, அது மெத்தவும் சரி. சாணம் தெளித்துச் சுத்தம் செய்யப்பட்ட தரையில் நெல்மணிகள் ஒன்றுகூடி இருந்தன. அந்தி மாலையின் வண்ண ஒளி அவற்றோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது.

திருவம்பலச்சேர்வையின் மனத்தில் மகிழ்ச்சி நிறைந்த நினைவுகள் கும்பல் சேர்ந்தன. ‘நல்லவேளை, போட்ட புள்ளி தப்பாது. எல்லாமாச் சேர்ந்து முந்நூறு கலத்துக்குத் தேறாமப்போவாது!’ என்று எண்ணமிட்டார். உழுது பயிரிட்டு உழைத்ததின் பலன் அவர் எதிர்பார்த்த வண்ணமே அமைந்திருக்கக் கண்ட அவருக்கு ஆனந்தம் அலைபாய்க் கேட்கவா வேண்டும்?

தலை முண்டாசை அவிழ்த்து உதறி முகத்தைத் துடைத்தார் சேர்வை. தூசியும் தும்பட்டையும் விலகின. புளிய மரத்தடியில் போரடித்த வைக்கோலை ஒன்று திரட்டிக்கொண்டிருந்தரர்கள் வேலையாட்கள். “ஏலே; மூக்கா! கிழக்கு முக்கத்திலே காத்தடிச்சுக் கிடத்தியிருக்கிற வைக்கல் பிசிறுகளை யெல்லாம் கவ்வல் கம்பாலே ஒண்ணு சேர்த்திடுப்பா” என்று ஆலோசனை சொன்ன திருப்தியுடன் வீட்டு வாசல் நோக்கி விரைந்தார். அவர். நொறுங்கிக் காய்ந்த கடலைக்கொடிகளைச் சாவதானமாக