பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5
ஆலமரத்துப் பைங்கிளி

நான் பேசுகிறேன் :

தீபாவளிக்கு ஊருக்குப் போய் வந்தேன். அந்தச் செய்தி இப்போது யார் கவனத்தையும் கவர்ந்தால், அதற்கு நான் பொறுப்பு அல்ல. ஆனால், நான் ஊர் சென்றிருந்த தருணத்திலே கடந்த அந்தச் சம்பவம் என்னை இழுக்கவில்லை; சிந்தையை ஆகர்ஷித்தது: நான் சொல்லப் போகும் இந்தக் கதை உங்களைத் திருப்திப்படுத்தினாலும், படுத்தாமற் போனாலும் அதற்கும் அடியேன் காரணம் அல்ல.

எனக்காக எழுதிக்கொண்ட கதை இது ― அல்ல, நான் கண்டேன்; கண்ணீர் சொரிந்தேன். என்னையறியாமலே கண்ணீர்க் கறையில் உருவாகிவிட்ட நிகழ்ச்சிச் சித்திரம் இது.

என்னை நம்பாதீர்கள்; தயை உண்டு உங்களுக்கு, நான் ஜடம்! இதோ என்னை ஆட்டுவிக்கும் குரல்கள் சில கேட்கின்றன.

கிளியின் இதயம் :

ஆவியுலகத்தில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா?. ஜியோ, பாவம்!... இந்த எழுத்தாளரைச் சட்டை செய்யா