பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

ஆலமுண்ட ஐயன் அவன், அன்பு நிறை ஜோதியவன்!
பாலமொன்று கட்டிடுவான், காதலராம் நமக்காக!

இந்தப் பாட்டுக்கூட எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. இது என் துணைக்கும் பொருந்துவதாதலால், பாட்டுப்புனையும் ஒரு வேலை எனக்கு மிச்சம். என் நன்றி இவ்வூர் ஆசிரியருக்கு உண்டு.

ஆஹா, இந்தக் காதலர்கள் உண்மையிலேயே பாக்கியம் செய்தவர்கள்தாம்! இப்படிப்பட்ட அதிர்ஷ்டம் ஆயிரத்தில் ஒரு ஜோடிக்குக் கூடக் கிடைக்காதே...!

என்ன சத்தம் அது? ஓ, நீயா? ம்... பேசம்மா, பேசு!

செல்லத் தேவன் ஊருணி :

ஆலமரத்துப் பைங்கிளி சொல்வது படிக்குப்பாதி! வாஸ்தவம்தான். ஆனாலும், அது உங்கள் முன் வைத்த நிகழ்ச்சிகள் அதிகம் இல்லை. ஆனால், என் மடியிலே பொன்னனும் பொன்னியும் வளர்ந்த விதமே அலாதி. அவர்களுடைய காதலுக்கு அன்பு என்ற பெயர் சூட்டக் கற்றுக்கொடுத்தவளே நான் தான். நான் பெண் அல்லவா? பூமிதேவிக்குச் சொந்தக்காரியாயிற்றே! பொன்னியின் மனம் எனக்குப் புரியாதா?

பொன்னன் ― பொன்னியார்? சொல்ல வேண்டாமா?

சோறு படைத்த சோழவளநாட்டுக் காவிரியோடு கலந்து உறவாட எனக்கு வாய்ப்பு ஏற்படாவிட்டாலும், அதன் எல்லைக்குள்ளாவது தலைசாய்த்து ‘பூந்து’ ப்டுக்க முடிகிறதே, அந்தமட்டும் நான் பாக்யவதி. என் அரவணப்பிலே நித்தம் நித்தம் ஆடிப்பாடித் தொட்டு