பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

‘மன்றுளே மாறியாடு மறைச் சிலம்படிகள்’ நடுங்கின; ‘வென்றுளே புலன் களைந்தார் மெய்யுணருள்ளந் தோறுஞ் சென்றுளே அமுதமூற்றுந் திருவருள்’ திகைத்தது; சிவன் சிந்தித்தார்.

‘கவுணியர்க்குப் பால் சுரந்த சக்தி’ தடுமாறினாள்; ‘பங்கயற்கணரிய பரம். பரனுருவே தனக்குரிய படிவமாகி, எண்ணிறந்த சரா சரங்களீனின்றுந் தாழாக் கொங்கயற் கண் மலர்க் கூந்தற் குமரி பாண்டியன் மகள்’ செயலிழந்தாள். சிவசக்தி சிந்தித்தாள்.

“தேவி, பூலோகம் வர வர உருப்படாமல் போய்க் கொண்டிருக்கிறது. பார்த்தாயா, அந்தப் பச்சை மண்ணை? கேட்டாயா, அதன் தீனக்குரலை? ‘குவா, குவா’ என்று கதறி அழும் அதன் வேதனையிலே, ‘தெய்வமே, தெய்வமே!’ என்ற எதிரொலி கேட்கிறதே? பாவம்!...படைப்பு புதிர் என்று சொல்லுகிறார்கள் மண்ணிலே. ஆனால், அவர்களே படைப்பைப் புதிராக்கி, அத்துடன் வாழ்க்கையையும் புதிராக்கிக் கொண்டு விடுகிறார்கள்; அது மட்டுமா? நீயும் நானும் கூடத்தான் அந்தப் புதிர்ப்பிணைப்பில் இணைக்கப்பட்டுப் பேசப்படுகின்றோம். விந்தைமிகு மக்கள்—மக்களா? மாக்கள்!”

பிறை சூடியின் குரலில் எரிமலை கனன்றது.

அன்பரே, உங்கள் வாய்மொழி முற்றும் உண்மை. கடந்த பத்து நாழிப் பொழுதாக நான் உறக்கம் கொள்ளவில்லை. முதற் குரல் எதிரொலித்தது— திடுக்கிட்டு விழித்தேன். சிசுவின் வினைப் பயன் அப்படியோ? பாவம், பிறந்த குழந்தை பிறந்த மண்ணில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதோ, பொழுது புலர்ந்து விட்டது. காட்டு வழி நடப்பவர்கள் ஓடோடி வருகிறார்கள்: குழந்தையைப் பார்க்கிறார்களே! ஆ, என்ன கொடுமை? ஐயோ, அவர்