பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

கொடுத்தது. அதற்கு அவர் தோள் கொடுத்தார். 'மெய் கண்டான் தியேட்டர்' உருவாயிற்று.

மார்க்கெட்டுக்குக் காய்கறியிலிருந்து 'இறைச்சி' வரை வாங்கும் பொது ஜனங்கள் சகலத்தனை பேர்களும், அந்தச் சினிமாக் கொட்டகையை ஒரு தரம் நின்று முறைத்துப் பார்த்து விட்டுப் போகாமல் இருந்ததில்லை; இருக்கவும் மாட்டார்கள். இதற்குக் காரணம் என்ன வென்று தெரியுமா?

அது....

அந்தத் தியேட்டரின் வெளி முகப்பில், “உண்மையே தெய்வம்; வாய்மையே வாழ்வு!" என்ற வாசகங்கள், பிரகதீசுவரர் கோயில் கலசம்போல் துலாம்பரமாகப் பளிச்சிட்டன. இம்மாதிரியான உபதேசங்களை வாழ வைத்து, அதன் மூலம் தாமும் வாழ எண்ணியவர் பிள்ளைவாள்.

உண்மையைச் சோதித்துப் பார்க்கும் அளவுக்குத் துணிச்சல் பெற்றவர் பிள்ளை. பொய்களுடனே புழங்கி வந்த சகடயோகத்தை அழைத்துக் காப்பி வாங்கிக் கொடுத்து, அவரையே மானேஜராக்கி, அதன் பிறகு தாம் எழுதிய மணிவாசகங்களின் மணியோசையைக் கேட்கச் செய்த துணிச்சல் பேர்வழி ஆயிற்றே அவர்! வாரம் ஒரு முறை வந்து தஞ்சையில் தங்கி, சகடயோகத்தையும், சகடயோகத்தின்பால் தொடர்பு பூண்ட 'உண்மை--- பொய்ப் படலத்தின்' நிகழ்ச்சிகளையும் பரிசோதனை செய்து திரும்புவது முதலாளியின் வழக்கம்.

சகடயோகம் இருக்கிறாரே, அவருக்குக் காசுதான் குறி, காகதான் கடவுள்! அதற்காக அவர் சட்டத்தின் பேரில் கைவைக்க முடியவில்லை. தமாஷ் வரி ஓடிய டிக்கெட்டுப் புத்தகங்களில் 'தமாஷ்' பண்ண முடியவில்லை. அவர் பொறுப்பில் நடந்த பெட்டிக் கடையிலும்,