பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


தாங்க வுலுவிழந்த வரம்புக்குக் கனத்து வருவதாகவே அவளுக்குப்பட்டது. நிமிஷத்துக்கு நி.மிஷம், வினாடிக்கு வினாடி, கணத்துக்குக் கணம் அவள் தன்னைத் தானே குனிந்து பார்த்துக் கொண்டாள். அவ்வாறு பார்த்துக் கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஆசையின் நெஞ்சு மகிழ்வின் கண்ணீராகக் கரைந்து மேனியில் வழிந்தது. அந்த உணர்வில், நன்னம்பிக்கையின் துடிப்பைக் கண்டாள் அவள்; அவளால் காது பொருத்திக் கேட்கவும் முடிந்தது. புயல், தென்றல் அவதாரம் எடுக்க எந்நேர மாகும்?

சுயப் பிரக்ஞையை தூண்டில் போட்டு இழுத்தது. பெண்மனம், இமை நுனிகளில் சந்திப்பு உண்டாகி, 'உண்டாக்கிக் கலைந்தது. இருட் குகையில் இதுவரை அகப்பட்டுத் திணறிக்கொண்டிருந்ததாக - உள்ளொலி: பேசியது. பாழ்வெளியின் வெறுமை அவளைப் பற்றியது. தீப்பற்றியது நினைவில். நெஞ்சை வசமாக்குபவளாக நாலா பக்கமும் விழிகளைச் சுழலவிட்டாள் அகிலாண்டம். ஊராளும் மாதாவும், உளமாளும் பிதாவும் தனிப்பட்ட போக்கில்- தனித்தன்மை பூண்ட பாவனையில் - அருள் நெறி முறைகளை முத்திரைகளாக 'ஏந்தித் திகழ்ந்த தனிமைப் பண்புடன் கூடிய மகிமையில் திகழ்ந்தனர். ஒன்றிய உள்ளத்தோடு, ஒரு முறைக்கு இருமுறையாகப் பார்த்தாள் அவள். விரிக்கப்பட்டிருந்த மாயத்திரை விலக்கப் பட்டதாக எண்ணமிடலானாள். "தாயே" - அம்பிகை! என்ற ஒலியலைகள் உந்திக் கமலத்தைத் தொட்டுப் புறப்பட்டன.

“அ...கி... லா!"

வார்த்தைகள் இடைவெளி கொண்டு கேட்டன்.

அகிலாண்டம் திசை திரும்பினாள்.