பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தன்னுடைய பட்டுச் சேலைத் தலைப்பால் துடைத்தாள். திருநீறு மடலினின்றும் துளி விபூதியை எடுத்து, அவர் நெற்றியில் இட்டு, மீதத்தைப் பக்தி கனிந்த பக்குவத் தோடு தன் நெற்றில் பூசிக்கொண்டாள். அச்சம் கடந்த ஆறுதல் பூத்தது.

அவள் கைகள உதறி நெட்டி முறித்தாள், தூக்கம் நேத்திரங்களில் ஊஞ்சலாடியது. அதைக் கருதாதவள் அவள். அமர்ந்திருந்தவள், எழுந்து ஊஞ்சலில் அமர்ந்தாள், 'அந்த நாளிலே நானும் இவரும் இந்த ஊஞ்சலிலே நலுங்கின்போது அமர்ந்து மஞ்சள் நீராடின நிகழ்ச்சி நேற்று நடந்தது மாதிரி அல்லவா தோன்றுகிறது?' சுற்று மதிலைத் தாண்டிக்கொண்டு வந்தது தெருநாயொன்றீன் அழுகைச் சத்தம், அவளது மேனி அதிர்ந்தது. அவளையும் அறியாமல், கரங்கள் தொழுதன. வாடைக் காற்றுப் பலத்தது. ஆகவே ஜன்னலில் நெளிந்த இள நீலத் திரையை இழுத்து மூடினாள். பிறகு, அங்கு மிங்குமாக - நடை பயின்றாள். கடைக்குட்டிப் பயல் ஆழ்ந்த உறக்கத்திற்குக் 'கப்பம்' செலுத்தியவண்ணம் இருந்தான். கலந்துகிடந்த போர்வையைச் சரிசெய்தாள்.

ஸ்டூலில் வைக்கப்பட்டிருந்த பூஞ்செடிப் பாத்திரம் அவளை இடறிவிட்டது. நகக்கண் வலித்தது. குனிந்து நிமிர்ந்தாள். அந்தப் புகைப்படத்தையே ஓர் அரைக் கணம் இமைக்காமல் நோக்கினாள். 'கமலாட்சி- கார்த்தி கேயன் இணை நீடு வாழ்க!' என்ற வரிகள் பளிச்சிட்டன. "ஆஹா!" என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டாள் அகிலாண்டம். - தன்னுடைய பத்து நாளைய வேதனைக் குமைச்சலை நொடிப் போதில் மறந்துபோனாள். தனக்கு இனி குறைவேதும் கிடையாது என்ற தைரியம் எழுந்தது. தன்னை மறந்து சிரித்தாள், -