பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் ; 97

26,

27.

28.

29.

30.

31.

வந்து திருமலையின்கண் வானவர் நாயகர் மருங்கு சிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திருமுன்பு வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகலமிதித்தோடி "இந்த அனுசிதம் கெட்டேன் யார்செய்தார்”

என்றழிவார். பெரிய புரா. 785)

"அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம் என்றும் அவனுடைய நிலை இவ்வாறறிநீ" என்றருள் செய்தார்.

- (பெரிய புரா. 806)

நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான் போருடைச் சுக்கிரீவன் அனுமன் தொழக் காருடை நஞ்சுண்டு காதருள் செய்தஎம் சீருடை சேடர்வாழ் திருவுசாத்தான்மே

(திருமுறை 3.33. திருவுசாத்தான்ம்)

ஆடும் கரியும் அணிலும் குரங்கும் அன்பு தேடும் சிலம்பியொடு சிற்றெறும்பும்-நீடுகின்ற பாம்பும் சிவார்ச்சனை தான்் பண்ணிய தென்றாற் பூசை ஒம்புதற் கியார்தான்் உவவாதார்

(திருவருட்பா, நெஞ்சறிவுறுத்தல், கண்ணி, 257-259)

ஆவுரித்துத் தின்று ழலும் புலையரேனும்

கங்கைவார் சடைக் கரந்தார்க்கு அன்பராகில்

அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே"

(ஆறாம் திருமுறை 938)

சிவனெனும் மொழியைக் கொடிய சண்டாளன்

செப்பிடின் அவனுடன் உறைக;

அவனொடு கலந்து பேசுக அவனொடு

அருகிருந் துண்ணுக என்னும்