பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

சைவ சித்தாந்தமும் மார்க்சியமும்

"சைவ சித்தாந்தமும் மார்க்சியமும்” என்பது, இந்தத் தலைமுறையில் சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். நமது சைவ சித்தாந்த நூல்கள் பரபக்கத்தில் எடுத்து ஆய்வு செய்து மறுக்கின்ற புறப்புறச் சமயங்களுள் தத்துவங்களுள் மார்க்சியம் இல்லை. ஆனால், மார்க்சியத்திற்கு முன்னோடி யாகவுள்ள உலகாயதம் (சார்வாகம்) எடுத்து ஆய்வு செய்யப் பெற்றிருக்கிறது. உலகாயதத்தின் வளர்ச்சியே மார்க்சியம். இங்கு வளர்ச்சி என்பது ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் உள்ளடக்கியதேயாம்.

சித்தாந்த நூல்களில் உலகாயதம் என்று ஆய்வு செய்யப்பெற்ற கொள்கை, காலந்தோறும் வளர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மார்க்சியமாக விஞ்ஞான பூர்வமாக வளர்க்கப்பெற்றுச் செழுமையடைந்து வளர்ந்துள்ளது. மேலும் மார்க்சின் தத்துவங்கள் விரிவான ஆய்வும் விளக்கமும் பெற்று உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தப் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் மார்க்சியம்