பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இ குன்றக்குடி அடிகளார்

சித்தாந்தமேயாம். வைணவமும் தமிழர் நெறியே. வைண வமும் சங்க காலத்தில் நிலவிய சமயமே. ஆயினும் சங்க இலக்கியங்களில் சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் பரவலாகப் பேசப் பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களில் பெரும்பான்மை சிவ பரம்பொருளையே வாழ்த்துகின்றன. சிவனே கடவுள்; அவன் பிறப்பு இறப்பு இல்லாத நிலைத் தன்மையுடையவன் என்பதனை ஒளவையார்,

  1. t

பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீலமணி மிடற் றொருவன் போல ன்ெனுக"

என்று கூறியுள்ளதால் அறியலாம்.

இளங்கோவடிகளும்

"விண்ணோ, ரமுதுண்டுஞ்சாவ வொருவரும் உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்'

என்றும், "பிறவா யாக்கைப் பெரியோன்' என்றும் கூறினார்.

அதுபோலவே உயிர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதும் "மன்னுயிர்' என்றே சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

புறநானூறு-19 சிலப்பதிகாரம்-வேட்டுவவரி-23 சிலப்பதிகாரம் -இந்திர விழவூரெடுத்த காதை-வரி 169 புறநானூறு, 20 : 21 அகநானூறு 31 : 4 கலித் தொகை 34 : 1 குறுந்தொகை 376 : ! பதிற்றுப்பத்து 15 : 35 பெரும்பாணாற்றுப்படை-வரி 32 திருமுருகாற்றுப்படை-வரி 278