104 தி குன்றக்குடி அடிகளார்
மார்க்சியம்
தமிழ்த்தந்தை திருவி.க. அவர்களால் "மா முனிவர்" என்று பாராட்டப் பெற்ற கார்ல்மார்க்சு கி.பி. 1818-ஆம் ஆண்டில் செருமானிய நாட்டில் பிறந்தவர்; சிறந்த அறிஞர்; மானிடசாதியின் வரலாற்றையும் அவ்வரலாற்று நிகழ்வு களின் உள்ளீடுகளையும் உலகத்தின் பல்வேறு தத்துவ நூல்களையும் அரிதின் முயன்று கற்று அவற்றின் பயனாக மூலதனம் (DasCapital) என்கிற மிக உன்னதமான ஒரு தத்துவ இயல் நூலைத் தந்ததவர். இத்தத்துவ நூலுக்கு சோவியத் நாட்டில் பிறந்த மாமேதை லெனின் எழுத்தாலும் உரை யாலும் விளக்கம் தந்தார்; செயற்பாட்டினாலும் மார்க்சிய அடிப்படையிலான சமுதாய அமைப்பிற்குக் கால்கோள் செய்து வளர்த்தார். இன்று உலகத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் மார்க்சிய தத்துவ நிழலில் சமுதாயம் அமைத்து வாழ்கின்றனர். உலகின் எல்லா நாடுகளிலும் மார்க்சீய தத்துவத்தின் பின்பற்றாளர்கள் வாழ்கின்றனர். அதன் எதிர்காலம் ஒளிமிக்குடையதாக விளங்குகிறது.
சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் தம்முள் முரண் பட்டவையும் அல்ல; உடன் பட்டவையும் அல்ல. சில மாறுபாடுகள் உள்ளன என்பது உண்மை. இந்த மாறுபாடுகள் தத்துவங்கள் தோன்றிய காலம் காரணமாகவும் அமைந் திருக்கலாம். அல்லது உண்மையான மாறுபாடுகளாகவும் இருக்கலாம். சைவ சித்தாந்தம் கடவுளை நம்புகிறது. மார்க் சியம் கடவுளை நம்பவில்லை. இஃது ஒரு முக்கியமான வேறுபாடு. மற்றபடி உலகத்தின் தோற்றம், உயிர்களின் நிலை, இந்த உலக வாழ்க்கை, உழைப்பின் சிறப்பு, உழைப்பாளர் தகுதி ஆகியவற்றில் சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் ஒன்றுபடுகின்றன. கார்ல்மார்க்சுக்குச் சைவ சித்தாந்தத்