ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 107
இங்ங்னம் நிகழுமானால் மக்கள் மார்க்சியத்தால் ஈர்க்கப் படுவதைத் தவிர்க்கலாம். அது மட்டுமன்று. மார்க்சியத்தால் உருவாகக் கூடிய சமுதாய அமைப்பைக் காட்டிலும் சிறந்த அக நிலை உணர்வுகளைப் படைத்து, மக்கட் சமுதாயத்தை இன்ப அன்பில் நிலை நிறுத்தலாம். இதனால், சாதனையின் வழி சித்தாந்தச் சமயத்தின் நிலை உயர்ந்து விளங்கும்.
உயிர்கள் படைக்கப்பட்டனவா?
சைவ சித்தாந்தம் உயிர்கள் கடவுளால் படைக்கப் பட்டன அல்ல என்று கூறுகிறது. உயிர்கள் என்றும் இயற்கையில் உள்ளவை என்றும் கூறுகிறது. இதை -
"எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தின் அழுந்தி
இருவினையின் தன்மைகளுக் கீடான யாக்கை அண்ணலரு ளால் நண்ணி அவை அவரா யதனால்
அலகில் நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால் புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்ப் புணரும் இருள் மலபாகம் பொருந்தியக்கால்
அருளால் உள்நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம்
உற்றிடும் நற் பசுவருக்கம் என உரைப்பார்
உணர்ந்தோர்’
என்று சிவப்பிரகாசம் கூறுகிறது.
மார்க்சியம் 'உயிர்கள் இயற்கையில் பரிணமித்தன.
என்ற டார்வினின் உயிரியல் பரிணாமக் கொள்கையை
ஏற்றுக்கொள்கிறது. -
8. சிவப்பிரகாசம் - சூத்2.பா.19