ஆலயங்கள் சமுதாய மையங்கள் x 109
தோன்றாது குறைவிலா நிறையாகிய பரம்பொருள் குறை யுடைய உயிர்களைப் படைத்தான்் என்பது ஏற்புடையதன்று; சைவ சித்தாந்தத்தின் கடவுட் கொள்கைக்கு உடன்பட்டு வராது. கடவுள் உயிர்களைப் படைத்தான்் என்ற கொள்கை பிற்போக்கு வாதிகளுக்கு வெற்றி கிட்டியது போலாகும். ஏழைகள் "கடவுளின் இந்த ஏற்பாட்டை மீறக்கூடாது; மீறினால் பாவம், நரகம் கிடைக்கும்” என்று அச்சம் கொண்டு மீளாத் துயரத்தில் ஆழ்வர். சைவ சித்தாந்தம், உயிர்கள் படைக்கப்பட்டவையுமல்ல; தோன்றியவையும் அல்ல; அழியக்கூடியவையுமல்ல என்று கூறுகிறது. இக்கருத்து வளரும் அறிவியல் உலகத்திற்கு இசைந்த கருத்து. அது மட்டுமன்று, முற்போக்குத் தன்மையுடையதுமாகும்.
அறிவும் அறியாமையும்
உயிர் தன்னுடைய வாழ்க்கையில் பரிணமித்து வளர அறிவு தேவை என்கிற கருத்தில் சைவ சித்தாந்தத்திற்கும் மார்க்சியத்திற்கும் உள்ள வேற்றுமையின் அளவு குறைவு. சைவ சித்தாந்தம் இயல்பாகவே உயிர் அறியாமையில் இருப்பதாகவும் இந்த அறியாமையினால்தான்் சமுதாய பொதுமைக்கு எதிரான "நான்”, “எனது” என்கிற சர்வாதி காரத் தன்மையுடைய தனித்தன்மை - பொதுமைக்கு எதிரான தனிவுடைமை ஆகிய சொற்களும், சொற்கள் வழிப் பட்ட உணர்வுகளும் முறையே கால்கொள்கின்றன என்கிறது. அறிவியல் உலகம் வளர்ந்து வருவதால் பொருளுற்பத்திக் கருவிகள் எளிமையாக்கப் பெற்று, குறைந்த நேரத்தில், குறைந்த செலவில், குறைந்த சக்தியில் அதிகப் பொருள்கள் உற்பத்தி செய்து குவிக்கக் கூடிய காலமிது. அதோடு துகரும் பொருள்களை - பணமதிப்புப் பொருள்களாக அல்லது சொத்தாக மாற்றுவதற்குரிய வாய்ப்பும் வளர்ந்துவிட்டது.