110 ஜ் குன்றக்குடி அடிகளார்
இந்தச் சூழ்நிலையில் மனிதன் கூடித் தொழில் செய்தல், கூடி உண்டு மகிழ்தல் என்ற மனப்போக்கிலிருந்து விலகி, தனி மனித உருக்கொள்கின்றான்; தனி உடைமை ஆர்வத்திற்கு வித்திடப்படுகிறது. இந்தச் சூழ்நிலிைல் தான்் "நான்", "எனது” என்ற மனிதகுலப் பண்பாட்டுக் கொல்லியான நச்சுனர் வுகள் "நான்", "எனது” என்ற சொற்கள் மூலம் வெளிப்படு கின்றன.
சித்தாந்தச் சமயச் சாத்திரங்களும் "நான்”, “எனது" என்பன அற்ற நிலையே அறநிலை என்று கூறும். நற்றமிழ்க் குமரகுருபரர்
"...நற்கமலை ஊரில் குறுகினேன் ఇఱ్వతీ திரையள (வு) என் பேரில் குறுகினேன் பின்"
என்று இலக்கண வடிவில் நயம்பட இதை எடுத்துரைத்தார். அதாவது 'சீவன்," "சிவன்" ஆயிற்று என்பது கருத்து. சீவன், சிவத்தன்மையடைந்த நிலை "நான்” “எனது” அற்ற நிலை.
மார்க்சியம் தோற்றம் - வளர்ச்சியின்மையின் காரண மாக அறிய வேண்டியவற்றை அறிவதற்குரிய வாய்ப்பின் மையின் காரணமாகவுள்ளது 'அறியாமை என்று கூறுகிறது. சைவ சித்தாந்தத்தின்படி அறியாமை இயற்கையிலேயே உள்ளது. மார்க்சியத்தின்படி அறியாமை இயற்கையன்று; வாய்ப்பின்மை காரணமாக ஏற்பட்டது அறியாமை. இந்த வேறுபாடு மிகப்பெரிய விளைவுகளை அல்லது எதிர் விளைவுகளை உருவாக்கி விடுவதற்குரியதன்று. அதனால், இந்த வகையில் வேறுபாடு இல்லையென்றே கருதினாலும் 11. குமரகுருபரர், பண்டார மும்மணிக் கோவை-பா24 -