பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஜ் குன்றக்குடி அடிகளர்

மேலும் ஆழமாகச்செல்கிறது; அவ்வாறாக முடிவின்றிச் சென்று கொண்டேயிருக்கிறது" என்று லெனின் கூறுகிறார்.

சைவ சித்தாந்தம் மனித அறிவின் எல்லை மிக வேண்டுமானால் அல்லது சிற்றெல்லையைக் கடந்தாக வேண்டுமானால் எல்லையற்ற கடவுளைத் துணையாகப் பெற்றால் மனிதன் அறிவு சிற்றெல்லையைக் கடந்தும் வளரும் என்று கூறுகிறது. இந்த அடிப்படையில்தான்் சிவஞானம் பெற்ற திருஞானசம்பந்தர் முதலிய ஞானாசிரி யர்கள் ஐந்தொழிலும் நிகழ்த்தியதாகத் திருத்தொண்டர் புராணம் கூறுகிறது. அது மட்டுமல்ல. சிவஞானம் பெற்றவர் களுடைய வாக்குகளும் இறைவன் அருளிச் செய்யும் வாக்குகள் போலவே கருதப்பெறும் என்று திருமுறை கூறுகிறது.

"எனதுரை தனது ரையாக #3 நீறணிந்து ஏறுகந்து ஏறிய நிமலன்"

என்பதறிக. சிவஞானம் பெற்றவர்களுடைய கரணங்கள், சிவத்தன்மையடைந்த கரணங்கள் என்பதைத் திருக் களிற்றுப் படியார்; .

"பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும் காலனை அன் றேவிக் கராங் கொண்ட - பாலன் ಅಣಶಿಶಿಶ್ಟಿಲ್ಲುಣ್ಣೆ 669ು கரணம்போல் அல்லாமை காண்"

என்று அருளிச் செய்துள்ளமையும் அறிக.

12. லெனின் நூல் திரட்டு. தொகுதி 38 பக்கம் 253 13. திருஞானசம்பந்தர் முதல் திருமுறை 761 14. திருக்களிற்றுப்படியார்-12 .