ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 113
சித்தாந்தக் கருத்துப்படி உயிர் சிவத்தின் துணையோடு தனது அறிவை வளர்த்து ஞானமாக்கிக் கொள்ளும்பொழுது அத்தகைய ஞானத் தன்மையடைந்த உயிர், ஒரோவழி உலகியல் நன்மைகள் செய்தாலும் பெரும்பான்மையும் இறவாத இன்ப அன்பு நிலையை எய்தி அமைதி பெறுவதிலேயே நிறைவு பெறுகிறது. மார்க்சியம் மனித உயிர், தொழில் செய்வதன் மூலமே தனது அறிவை விரிவு படுத்திக் கொண்டு பரந்த பூத பெளதிக உலகத்தின் செல்வங்களை யெல்லாம் மானிடசாதியின் அனுபவத்திற்குக் கொடுப்பதில் முனைப்புடன் ஈடுபடுகிறது; அது மட்டுமன்று. காலத்தையும் தூரத்தையும் இயற்கையாற்றல்களையும் வென்று விளங்கும் சாதனையைச் செய்வதாகக் கூறுகிறது. இரண்டு தத்துவங் களும் செல்லும் அறிவுவழியின் இலக்குகள் மாறுபட்டிருக் கின்றன. இரண்டும் தேவையே. ஆனால் மார்க்சியம் காட்டும் அறிவுலகம் முதல்நிலையில் வெற்றி பெற்று அவ்வெற்றியின் முடிவில் - சைவ சித்தாந்த ஞானம் காட்டும் இன்ப அன்பில் வந்து தங்குமானால் மானிட - வரலாற்றுக்குப் பெரும் பேறாகும்.
கடவுள் தன்மை:
மார்க்சியம், மனிதனை விஞ்சிய ஒரு பொருள் இருப்பதாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. -
"மக்கள்தான்் முக்கியமான முதன்மையான ஆக்க சக்தி; படைப்பாளி, வரலாற்றின் உண்மையான அகப்பொருள்” என்பது மார்க்சியம்.
சைவ சித்தாந்தம் கடவுளை, மனிதனைவிடச் சிறந்த பொருளாகக் கொள்கிறது. ஆனால், உயர் பொருளாக
15. மார்க்சிய - லெனினிய தத்துவத்தின் அடிப்படைகள் பக்கம். 860