114 இ குன்றக்குடி அடிகளர்
இருக்கிற கடவுள் மனிதனைக் கொத்தடிமைப்படுத்துவது அல்லது உயிர்களிடத்தில் தற்குறை மனப்பான்மையைத் தோற்றுவிப்பது உயர் மனப்பான்மையல்ல. இயல்பான வளர்ச்சியில்கூட வேற்றுமைகள் இருப்பது இயற்கை; இதற்கு மார்க்சியம் உடன்படுகிறது. தோழனாகவுமே @)óー3」 சித்தாந்தச் சமயம் கருதுகிறது. மனிதருள் சிறந்த மனிதர் இருப்பதில்லையா? இலட்சக் கணக்கான புரட்சித் தொண்டர்களுக்கு லெனின், மாமேதையாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கவில்லையா? மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலும் இன்றும் எண்ணற்ற தொழிலாளர்களுக்கும் முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கும் சிறந்த ஒளி விளக் காகத் திகழவில்லையா? அது போலச் சைவ சித்தாந்தம் காட்டுகிற இறைவன் உயிர்க்கு நல்ல தோழனாய், ஆசிரி யனாய் அமைந்து அழைத்து வழிகாட்டிச் செல்கிறான் என்று கருதப்படுகின்றதே தவிர அவன் ஒர் உயர் பொருளாக மட்டும் கருதப் பெறுவதில்லை. சுந்தரர்,
"ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான் செய்யுந் துரிசுகளுக் குடனாகி மாழையொன் கண்பரவையைத்தந்தாண்டானை மதியில்லா ஏழையென பிரிந்திருக்கேன் என்ஆரும் இறைவனையே’
என்று பாடியிருப்பது அறிக. இறைவனுடைய துணையால் பெறும் அறிவுதான்் ஞானம். அதாவது பேரறிவு என்று பாராட்டப்பெறுகிறது. ஆதலால், உயிர்கள் அறிவு பெறுவது முதற்கடமை. உழைக்கும் ஆற்றலும், உழைப்பின் வழித் தொழிலியற்றலும் அவ்வழி அறிவை விரிவு செய்தலும் உயிர்களின் இயல்பாகும். இம்மூன்று நிலையும் சைவ சித்தாந்தத்திற்கும் மார்க்சியத்திற்கும் இசைந்த நிலையாகும். 16. சுந்தரமூர்த்தி நாயனார் - ஏழாந்திருமுறை-510 -