பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 115

ஒருமைப்பாட்டை உணர்த்தும் உயர் தத்துவங்கள்:

நாடு, மொழி, இனம், மதம் ஆகியன மனிதனுக்குப் பிறப்பின் காரணமாகத் தற்செயலாக வந்தமைந்தன. இவற்றை எளிதில் மனிதன் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒப்பற்ற மனித குலத்திலிருந்து மனிதன், எந்தக் காரணத்திற் காகவும் தன்னைத் தனி நிலையிலும் சரி, பொதுநிலையிலும் சரி, ஒதுக்கியோ ஒதுங்கியோ வாழ்தல் கூடாது. தமிழ் நாட்டிற் பிறந்த ஒருவர். தமிழைக் கற்றறியாமல் சூழ்நிலையின் காரணமாக ஆங்கிலம் கற்க நேரிட்டால் - அவருக்குத் தமிழில் பேசவும் எழுதவும் வராது. ஆங்கிலம் மட்டுமே வரும். ஆதலால், மாற்றிக்கொள்ளக் கூடியனவெல்லாம் உயிரைக் சார்ந்த பந்தங்களல்ல. அதுமட்டுமன்று-ஒரு மனிதன் எல்லா மொழிகளையும் கற்கவும் முடியும்; எல்லா நாட்டு மாந்த னாகவும் முடியும். ஆதலால், நாடு, மொழி, இனம், மதம் ஆகிய வேறுபாடுகளை மையமாகக் கொண்டு மானிட உலகத்தைப் பிரிக்கக் கூடாது என்பது மார்க்சியம். இயற்கையிலமைந்த தொழில் செய்யும் ஆற்றல், செய்யும் தொழில் மூலம் உலகத்தை இயக்குதல், செய்யும் தொழில் மூலம் உலக இயக்கத்துக்கு-வரலாற்றுக்கு உந்து சக்தியாக இருத்தல் ஆகியன அனைத்துலக மானிட சாதிக்கும் பொதுமை. எனவே உயிர்க் குலத்தை ஒருங்கிணைப்பது தொழில். இதுவே மார்க்சியம். சைவ சித்தார்ந்தத்திலும் உயிர்க்குலம்,

"அவன், அவள், அது"

17. சிவஞான போதம் சூத்திரம் - 1