பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ஜ் குன்றக்குடி அடிகளார்

என்றே பேசப்பெறுகிறது. சிவஞான போதத்தில் நாடு, மொழி, சாதி, இனம் பற்றிய சொற்கள் பயிலாமையைக் கூர்ந்தறிக.

"ஐம்புல வேடரின் அயர்ந்தனை"

என்றும்

"நண்ணனல் வேவாத நற்றவர் தம்மினும் மண்ணமர மாச்செலுத்தும் பாகரினும்”

என்றும் ஒரே வழி பயின்றிருப்பினும் தொழிற் குறிப்பின் வழியிலேயாம். பிறப்பின் அடிப்படையிலன்று.

உயிர்களுக்கு முன்னோடியாக - தலைவனாக விளங்கும் இறைவனும் - தொழிலியற்றும் தலைவனாகவே பேசப்படுகிறான். அதுவும் தற்சார்பு இல்லாத சமூகப் பொது உழைப்பாக உயிர்களின் நலம் கருதியே தொழிலியற்றும் தலைவனாகப் பேசப்பட்டிருத்தல் சிறப்பு. மெய்கண்ட நூல்களுள் ஒன்றாகிய - திருக்களிற்றுப்படியார், "அம்மையப்பரே, உலகுக்கு அம்மையப்பர்"

என்று உலகம் தழுவிய கருத்தை உணர்த்துகிறது. ஆதலால், சைவ சித்தாந்தச் சமயம் மானிட சாதியில் ஏற்படும் நாடு, இன, மொழிப் பிரிவினைகளைக் கடிந்து ஒதுக்குகிறது என்பது உண்மை. ஏன்? கடவுளையும் கூட உலகிற்கு ஒருவனாகவே உணர்த்துகிறது. உலகோர் எந்தப் பெயரில், எந்தக் கோலத்தில், யார் தொழுதாலும் அவர் ஒருவரே என்கிற ஒருமையில், சைவம் நிலைத்து நிற்கிறது. ஆனால், இன்று சித்தாந்தச் சைவத்தைச் சார்ந்திருப்பவர்கள்,

18. சிவஞான போதம் சூத்திரம் - 8 19. சிவஞான போதம், பத்தாம் சூத்திரம், இரண்டாம் அதிகரணம் 4 20. திருக்களிற்றுப்படியார் 1