ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 117
சித்தாந்தச் சைவத்தை வாழ்வியலாக்கத் தவறிவிட்டார்கள். மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் அறவே மறுத்த, மனித குலத்தை வேற்றுமைப் படுத்தும் புன்மை நெறிகளை, பொய்ம்மைச் சாத்திரங்களின் பெயரால் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். கோடானுகோடி மக்களைத் தீண்டத்தகாதவர்களாக்கிக் கொடிய துன்பத்தை இழைத்து வருகின்றனர். மெய்கண்ட சிவம் வழங்கிய புனித நெறி - அப்பரடிகள் வழங்கிய அருள் நெறி - சேக்கிழார் காட்டிய செந்நெறி வழிவந்த தமிழகம், சராசரி மனிதனுக்குத் திருக்கோயில் வழிபாட்டுரிமையைக் கூட வழங்கவில்லை. நாடு விடுதலை பெற்ற பிறகு சட்ட சபையில் இயற்றப்பெற்ற ஆலய நுழைவுச் சட்டம்தான்் இந்த உரிமையைத் தந்து, மனித குலத்தின் மீது படிந்திருந்த கறையை நீக்கியது. ஆக, மனித குலத்தை வேற்றுமையற்ற ஒருமையுணர்வுடையதாகக் காண்பதில் சைவ சித்தாந்தச் சமயமும் மார்க்கியமும் ஒரே நிலையின. .
வறுமை நீக்கத்திற்கு வழிகாட்டாதது ஏன்?
மானிட சாதியில் அடுத்துள்ள பெரிய வேற்றுமை வளம் - வறுமை ஆகும். வறுமையை, -
"வறுமையாம் சிறுமை’
என்று சிவஞான சித்தியாரும்
"நல்குரவென்னும் ஒதால்விடம்’
என்று திருவாசகமும் கடிந்து கூறுகின்றன. வறுமை, வளம் என்கிற வேறுபாடு இயற்கை என்றோ, கடவுளின் படைப்பு
21. சிவஞானசித்தியார் - பக் - 181 - 22. திருவாசகம் போற்றித் - திருவகவல் - வரி 40