ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 121
பெறும் சொற்கள் ஏழை-பணக்காரன் என்பதுவே. இந்த ஏற் பாட்டுக்கும் ஊழுக்கும் யாதொரு தொடர்புமில்லை; கடவு ளுக்கும் யாதொரு தொடர்புமில்லை. புண்ணிய பாவத்தினை நினையாமையாலும் முறை செய்யும் அரசின்மையாலுமே ஏழை-பணக்காரன் ஏற்பாடு தோன்றுகிறது. இவை அப்பட்டமான சுயநலம் படைத்த மனிதர்களின் ஏற்பாடு. பிற்காலச் சமய நூல்களில் இந்த ஏற்பாட்டுக்கு மறுப்பு இல்லாமல் இருக்கலாம். அதனால் இந்தமுறை புனிதமாகி விடாது.
"ஊழ்" என்கிற சொல் "ஊழ்த்தல்" என்கிற சொல்லின் அடிப்படையில் பிறந்தது. ஊழ்த்தல் என்றால் விளங்கத் தோன்றுதல் என்பது பொருள். உயிர், நேற்று - நேற்று முன்தினம் தொடர்ந்து வாழ்ந்த முறை, இயற்றிய செயல், முயற்றிய வினை ஆகியவற்றின் உணர்வு உயிரிடத்தில் இயல்பாக விளங்கித் தோன்றுவது இயற்கையே. இதனைத் தான்் பழக்கம் என்பர். பழக்கத்தின் காரணமாக வேம்பை இனிப்பாகவும், கரும்பைக் கசப்பாகவும் துய்க்கும் புழு வினைக் காண்கிறோம். அதனால்,
"பழக்கம் தவிரப் பழகுவ தன்றி உழப்புவ தென்' -
என்று திருவுந்தியார் அறிவுறுத்திற்று. எனவே முன்னேற்றத் திற்குப் பயன்தராத பழக்கங்களால் வந்தமையும் உணர்வின் வழியதாகவே வாழ்தல் வாழ்க்கைக்குத் துணை செய்யாது; பயன்தராது என்று ஒருவன் தெளிந்து துணிவானானால் அந்த உணர்வை மாற்றமுடியும் என்பதே சித்தாந்தத்தின் முடிவு. மனிதனின் அறிவறித்த ஆள் வினையைவிட ஊழ்,
27. திருவுந்தியார் - 2