ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 123
இல்லம் இல்லாமலும் வாழும் நிலையினை இன்று காண்கின்றோம். மதிப்புடைய - பயன்பாடுடைய உற்பத்தி செய்தற்குரிய திறனை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதாவது சித்தாந்த மரபின்படி அவர்களுடைய ஊழ் நன்றாகவே அமைந்திருக்கிறது. ஆனால், இப்பிறப்பில் அவர்களுடைய உழைப்புச் செல்வத்தை அவர்களிடமிருந்து தட்டிப் பறிப்பதை எங்ங்னம் ஊழாகக் கருதமுடியும்? இங்ங்ணம் பிறர் பங்கை எடுத்துக் கொள்வது நெறிமுறையன்று என்று கருதிய அரசுகள் இயற்றிய சட்டங்கள் மூலம் உழைப்பாளர்களுக்குரிய பங்கு கிடைத்து வருவதைப் பார்க்கிறோம். இதனால் ஏழை - பணக்காரன் வேறுபாடு ஊழின் பாற்பட்டதன்று என்பது உறுதியாகிறது. கண்முன்னே தெரிகிற இந்த உண்மைக்குக் கட்புலனுக்கு வராத தத்துவத்தைப் போட்டுக் குழப்புவதில் என்ன பயன்?
பிற்போக்கு வாதிகள் வினையின் பயனாகி செல்வத்தை, வினை இயற்றியோருக்கு உரிமையாக்காமல் அவர்களின் பங்கை எடுத்துக் கொள்வதற்காக, வினைக்கு அர்த்தமற்ற கருத்தைக் கற்பித்துள்ளனர் என்பதை முன்னே கூறியவற்றால் அறியலாம். இதுவே சைவசித்தாந்தத்தின் கொள்கை. மார்க்சியம் சுரண்டலை அறவே கண்டிக்கிறது. எப்படி உழைப்பாளி சுரண்டப்படுகிறான் என்பதையும் அதை மாற்றும் வழியையும் கூலி, விலை, இலாபம் என்ற தத்துவத்தின் வழி தெளிவாக விளக்கிய முதல் மேதை மார்க்சுதான்். ஆக, பொருளியல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்பிற்குரிய அடிப்படைக் கொள்கைகள் சைவ சித்தாந்தச் சமயத்திற்கும் மார்க்சியத்திற்கும் முரண் பாடில்லை. -