பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 125

"நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத்திற்கோர் வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமல

னுக்கோர் சத்தியாய்ப் புவன போகம் தனுகர ணமும் உயிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும்

செய்யுமன்றே"

என்பது காண்க.

ஆதலால் உலகம் இயற்கை. அது உட்பொருள்: உண்மையானது. இந்த உலகிலேயே உயிர்களுக்குத் துய்ப்பனவும் உய்ப்பனவும் கிடைக்கின்றன என்கிற கருத்தில் இரு தத்துவ இயல்களும் ஒத்து நிற்பதை ஒர்ந்தறிக.

வாழ்க்கை வாழ்வதற்கே!

உலகில் சில சமயங்கள் கூறுவதுபோல் சித்தாந்தச் சமயம். வாழ்க்கையை எள்ளுவதுமில்லை; பழிப்பதுமில்லை. இந்த மானிட வாழ்க்கை அரியது; போற்றுதலுக்குரியது: பயன்பாடுடையது என்றே சைவ நூல்கள் கூறுகின்றன.

"வாய்த்தது ತ್ವೇಂಕಿಲಿ ஈதோர் பிறவி

மதித்திடு மின்

என்றார் அப்பரடிகள். மார்க்சியமும் இந்த வாழ்க்கையைப் பாராட்டுகிறது. வாழ்வதற்கே வாழ்க்கை என்பது மார்க்சியம். ஆனால் வாழும் நெறிமுறைப்படி வாழ்தல் வேண்டும். அதாவது, வள்ளுவர் கூறியாங்கு வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும். மானிட வாழ்க்கையின் போக்குகளைப் பற்றி மார்க்சியத்தின் திரண்ட கருத்து இது.

31. சிவஞான சித்தியார் - பக்கம் - 143 32. திருநாவுக்கரசு சுவாமிகள், நாலாந் திருமுறை. 81.5