ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 9
கடவுள் உருவமில்லாதவர். ஆனால் எல்லையற்ற ஆற்றலும் நிகரற்ற அருளும் இருக்குமாயின் எந்த பொருளும் அது விரும்பும் உருவத்தைப்பெற்ற இயலும். ஆயினும் கடவுளுக்கு உருவம் தேவையில்லை. மானிடரில்கூட வளர்ந்த சிலர், ஞானத்தாலேயே இறைவனைத் தொழுவர். அவர்களுக்கும் உருவம் தேவைப்படாது. ஆனால், சராசரி மனிதர்கள் - சிந்திக்க இயலாதவர்கள், பற்றுக்கோடு ஒன்றின்றிச் சிந்திக்கமாட்டாதவர்கள் எண்ணிக்கையில் மிகப் பலர். இவர்கள் சிந்திப்பதற்குப் பற்றுக்கோடாக விளங்க வேண்டு மென்றே இறைவன் அருளும் நோக்கத்துடன் திருவுருவங் களை இடமாகக் கொண்டு எழுந்தருளி அருள் வழங்கு கின்றான். ஒருவுருவ வழிபாடு, வளரும் சமுதாயத்திற்குத் தவிர்க்க இயலாதது; தேவையும் கூட! மக்கட் சமுதாயத்தில் திருவுருவ வழிபாடு தோன்றிய பிறகுதான்் திருக்கோயில் நாகரிகம் கால் கொள்கிறது. திருக்கோயில் நாகரிகம் தொடங்கிய காலந் தொட்டு மனிதகுல வாழ்வில் ஒரு புதிய ஆற்றல் மிக்க சமுதாய இயக்கத்திற்கு மையமாக விளங்கு கின்றது. . -
திருக்கோயில் ஏன்?
கடவுள் எங்கும் நிறைந்தவர்; எல்லாப் பொருள் களிடத்தும் தங்கியிருப்பவர், x -
"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையு மாய்க் கோனாகி யான் எனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே."
என்று மாணிக்க வாசகர் கூறுமாறு போலவும்,