126 இ. குன்றக்குடி அடிகளார்
"விலங்குகளும் உண்கின்றன; உறங்குகின்றன; இன விருத்தி செய்கின்றன; உடற் பாதுகாப்பின் முனைப்புடன் நிற்கின்றன. மானிடனும் இவற்றை மட்டுமே இயற்றினால் அது மானிட வாழ்க்கையாகாது. மானிட வாழ்க்கைக்கும் இவை இன்றியமையாதவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இவற்றிலும் மேம்பட்ட சில வாழ்க்கை நோக்கங்கள் மானிடத்திற்கு உள்ளன. அவை என்ன? மானிடத்தின் தரத்தை உயர்த்துதல்; ஆன்மாவைச் செழிப்புறச் செய்தல்; உலகத்தின் எண்ணற்ற வைப்புகளை அனுபவத்திற்குக் கொண்டு வருதல்; காலம் தூரம் ஆகியவற்றை வென்று விளங்கும் ஒருலகம் காணல்; மனித நாகரிகத்தினை அரித்து அழிக்கும் நச்சுத் தீமைகளை அறவே அகற்றுதல்; உலக வரலாற்றுக்கு உந்து சக்தியாக விளங் குதல்- இவை மானிடத்தின் சிறப்புகள். இத்தகைய சிறப்பு களுடன் மனிதன் வாழ்ந்தால்தான்் மானிட வாழ்க்கை. அஃதில்லையேல் விலங்கியல் வாழ்க்கை"
இக் கருத்து சைவ சித்தாந்தத்திற்கும் ஏற்புடையதே யாம் - ஆதலால் மானிட வாழ்க்கையை அர்த்தமுடைய தாக்குவதில் இவ்விரு தத்துவங்களும் ஒத்து நிற்பது நமது டேறு.
மானிட சமுத்திரம்:
மனிதன், தன்னிச்சையாக வாழ ஆசைப்படுகின்றான். இயல்பாக அவன் காட்டுமிராண்டி. கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயல்களில் அவனுக்கு நாட்டமில்லை. சமுதாயப் பேரமைப்பிலிருந்து மனிதன் தனித்து ஒதுங்குவது பஸ்மா சுரன் கதையை ஒத்ததாக முடியும். எண்ணற்ற கோடிக்