128 ஜி குன்றக்குடி அடிகளார்
என்பது சிவஞான சித்தியார். மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் யாண்டும் இறைவனை அம்மையப்ப ராகவே போற்றிப் பரவுவதைக் காணலாம். சித்தாந்தச் செந்நெறியின் தொன்மை வழிபாட்டுத் திருமேனி, அம்மையப்பர் திருமேனியாகவே இருந்திருக்க வேண்டும் என்பது நூலறிந்தோரின் துணிபு. சங்க இலக்கியங்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்களிலும் அம்மையப்பர் திரு வுருவே போற்றிப் பரவப் பெறுகிறது.
wi
- ***** **********சேர்ந்தோள் உழையே செவ்வான் அன்னமேனி.'
"நீலமேனி வருவிமை பாகத்து
ஒருவன். m36
"பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று”
என்பன அறிக.
திருக்குறளில் வரும் "ஆதிபகவன்' என்ற சொல்லுக்கும் சக்தியைப் பங்கிலுடையவன் என்பதுதான்் பொருள்.
"தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கினியும் சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்துரதாய் கோத்தும்பி’
என்பது திருவாசகம். அம்மையப்பர் திருக்கோலத்தையே "தொன்மைக்கோலம்" என்று மாணிக்கவாசகர் குறிப்பிடு கின்றார்.
35. அகநானூறு - கடவுள் வாழ்த்து 36. ஐங்குறுநூறு - கடவுள் வாழ்த்து 37. புறநானூறு - கடவுள் வாழ்த்து 38. திருவாசகம் திருக்கோத்தும்பி - 18