ஆலயங்கள் சமுதாய மையங்கள் $ 129
"அண்ணலார் அருட் சக்தியும் சிவனும் ஆய தன்மையின் அன்று தொட்டுலகம் பெண்மை ஆண்மை என் றிருவகைப் புணர்ப்பாற் பிறங்கும்.
என்னும் காஞ்சிப்புராணத் திருப்பாடலும் காண்க. சைவத்தின் உயிர்நாடியாக விளங்கும் திருக்கோயில் வரலாற்றில், மதுரைத் திருக்கோயில் வரலாறு - சிறப் புடையது. அங்கு, அங்கயற்கண் அம்மைக்குச் சொத்துரி மையும் ஆட்சியுரிமையும் வழங்கிய சைவத்தின் மாண் பினைக் காண்க.
திருஞானசம்பந்தர், அயல் வழக்கை மறுத்து வழக்காடியது இயற்கையோடிசைந்த நமது சமய மரபுகள் பாழ்படுமே என்ற கவலையினாலேயாம். எளிதில் ஏற்றுவாழ இயலாத அயல் வழக்குகள் தமிழகத்தில் நிலவிய வாழ்க்கை யமைப்பை நிலை குலையச் செய்தன. அதனால், திருஞான சம்பந்தர் இயற்கையோடிசைந்த வாழ்க்கையை வலியுறுத் தவே விரும்பினார் என்பதை அவருடைய திருமுறைகளில் இயற்கை வருணனை நிரம்பிக் கிடப்பதாலும், அவை முற்றாக இசைத் தமிழாக விளங்குவதாலும், அம்மையப்ப னையே பரவிப் பாராட்டுவதாலும் உறுதிப்படுகிறது. சேக்கிழாரின் பெரியபுராணத்தில், உற்ற அமைச்சராகவும், துணிவுமிக்க செயல்களுக்குத் துணைவராகவும் இழுக்கல் ஏற்படும்போது இடித்துத்திருத்தும் ஆசிரியராகவும் முறையே விளங்கிய பெண் பாலாரைப் பார்க்கிறோம். மார்க்சியமும் மானிடவர்க்கத்தில் ஆண், பெண்ணிடையே ஏற்றத்
39. காஞ்சிப்புராணம் தழுவக்குமைந்தபடலம் - 13