ஆலயங்கள் சமுதாய மையங்கள் ; 137
மனிதனது ஞானம்எல்லா ருடனும் எல்லை
வரையறைகள் ஒதுக்கங்கள் யாது மின்றிப் புனிதமொடு பகிர்ந்துகொள்ளத் தக்க தாகும்; போந்தமனி தப்பிறிவிக் குரிய செய்தி நனிவிழிப்பாய் எப்போதும் இருப்ப தாகும்:
நாளும் அவன்இலக்கு, மேம்பா டுறுத லாகும்; எனின் அந்தப் பொழுதில்தான்் உண்மை யான
பயன்பாட்டு மனிதனென ஏற்றம் கொள்வான்!
இது மானிட வாழ்க்கையை ஜப்பானிய முறையில் eggsst GT(ggili Gupp "New Concept of Man" gyŘIG603; கவிதையின் தழுவலாகும்.
வாழ்க்கை உண்மையானது; பொருளுடையது. வாழ்க்கை வாழ்வதற்கே என்பது தமிழ்நெறி. வாழ்தல் வேறு; பிழைத்தல் வேறு; ஜீவித்தல் என்பது வேறு. உழைப்பதையே பிழைப்பாகக் கொண்டு வாழ்ந்து இன்பம் காண்பவர்கள் பெரியோர்கள்; சான்றோர்கள். பலர், பிழைப்பு நடத்துவதற் காக உழைக்கிறார்கள். அதாவது ஊதியத்தை எதிர்பார்த்தே வேலை செய்கிறார்கள். அதில் ஏற்படும் கூடுதல் - குறைவு களுக்காக வேலை செய்வதையே கூட விட்டுவிடுகின்றனர். இஃது இழிசெயல். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்” என்று வள்ளுவம் கூறும் "வாழ்வில் வெகு முக்கியமாய்க் கற்றுக் கொள்ள வேண்டிய செய்தி, எங்ங்னம் வாழ்வது என்பதே!” என்றார் ஆவ்பரி. தெய்வத்தைப் பரவி நிற்றல் தெய்வத்திற்குப் பெருமை சேர்ப்பதற்கன்று. நாமும் இறைமைக் குணங் களையும், இறைமையின் ஆற்றல்களையும் பெற்று வாழ்ந் திடுதல் வேண்டும் என்பதற்கேயாம். அப்பொழுது மானுட வாழ்க்கையே இறைமைநலம் மிக்க வாழ்க்கையாக உரு மாற்றம் பெறுகிறது. எப்பொழுது? வாழ்வாங்கு வாழும் பொழுது!