138 தி குன்றக்குடி அடிகளார்
சொல் எளிது. ஆனால், வாழ்தல் அருமைப் பாடுடையது. வாழ்க்கையென்பது தயக்கங்கள், மயக்கங்கள், போராட்டங்கள் ஆகியவற்றால் ஆகின்ற ஒரு தொடர் வரலாறு. இந்தத் தொடர் வரலாற்றில் நாயகனாக - நாயகியாக இருப்பவர்கள் தொடர்ந்து வாழ்க்கையை முழுமைப்படுத்தும் நோக்கத்தோடு போர்க்குணம் மிக்க வராக வாழ்க்கையை இயக்கிக் கொண்டேயிருக்க வேண்டும். தியாக உணர்வுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செய்யும் பணிகளால்தான்் வாழ்க்கை முழுமை பெறுகிறது; ஆன்மா முழுமை பெறுகிறது. மலர்கள் மலர்கின்றன. அர்ப்பணிப்பு உணர்வுடன் மற்றவர்களுக்கு மனம் வழங்குவதே அவற்றின் வாழ்க்கை. மணம் தந்து முடிந்த வுடன் அவற்றின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. மரங்கள் கனிகளைப் பழுக்கச் செய்கின்றன! கனிகளின் நோக்கம் மற்றவர்களை வாழ்விப்பதே. மற்றவர்களுக்கு வாழ்வு தருதலே வாழ்க்கையின் குறிக்கோள்; முடிவு! வாழ்வாங்கு வாழ்தல் ஓர் அரிய கலை. அறிவார்ந்த சதுரப்பாடு. வாழ்க்கையென்பது கட்டி முடிக்கப்பட்ட மாளிகையன்று; நாமே ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்முடைய உணர் வால், எண்ணத்தால், செயற்பாட்டால் வாழ்க்கையைக் கட்டுமானம் செய்து கொண்டிருக்கின்றோம். தான்் இருந்து வரும் இல்லத்தைத் தான்ே துக்கிச் செல்லும் நத்தை யினத்தைப் போல நம் வாழ்வை, நம் வாழ்வின் வெற்றி தோல்விகளை - இன்ப துன்பங்களை நாமே சுமந்து செல்லு கின்றோம். "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற சங்க நூற்கருத்தும் ஒப்பு நோக்கத்தக்கது.
Eij GYT LDFTêðf வாழ்க்கைக்கு ஒவ்வொரு மனிதனும் ஒருங் கிணைந்த அனைத்தும் நலமுடன் இயங்குகின்ற ஒரு.