ஆலயங்கள் சமுதாய மையங்கள் $ 141
இல்லை. சார்புகளின் காரணமாக மனம் மாறுகிறது. மனத்தின் சார்பை நன்றின் பாலுடையதாக்கவேண்டும்! நன்மை செய்வதே துய்மையாய் இருப்பது” என்பது அனுபவ வாக்கு அது எளிதான் காரியமன்று. மிகக் கடுமையாகச் செய்யவேண்டிய முயற்சி இதனை.
"சென்ற இடத்தாற் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு"
என்று வள்ளுவம் கூறும்.
நன்று இது, தீது இது எனப் பகுத்து அறிந்து நன்றின்பால் உய்த்துச் செலுத்துகின்ற அறிவு தேவை. அறிவை எங்கனம் பெறுவது? அறிவு, பல திறத்தது. ஒன்று, இயற்கை நடைமுறை; வாழ்க்கையில் படிப்பினைகள் மூலம் பெறும் அறிவு. இதனைப் பட்டறிவு என்பர். “சிந்தித்து உணர்ப வருக்கு நேற்றைய அனுபவம் இன்றைய ஆசிரியன்" என்பது பழமொழி. பிறிதொருவகை அறிவு, வாழ்க்கையில் நிறைந்த பட்டறிவினைப் பெற்ற ஆசிரியர்கள் எழுதிய நூல்களைக் கற்பதன்மூலம் பெறும் அறிவு. நூல்கள் வழி ஒரு கருத்து உருக்கொள்வதற்குப் பலநூறு ஆண்டுகள் பிடிக்கும் என்பதை உய்த்துணரும் பொழுதுதான்் நூலின் அருமைப்பாடு தெரியும். வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்தையும் நாமே பட்டறிவதற்குப் பதில் நமக்கு முந்தி வாழ்ந்தோர் பட்ட அனுபவத்தின் எல்லையில் நம்முடைய வாழ்க்கை தொடங்குகிறது. அதனால் நம்முடைய வாழ்க்கைப் பயணம் எளிதாகும். இத்தகு நூலறிவு பெறுதலுக்கும் செவிவழி அறிவு பெறுதலுக்கும் நாம் எவ்வளவு தொகை செலவழிக்கிறோமோ அதைப்போலப் பலமடங்கு திரும்பப் பயன் கிடைக்கும். இவ்வாறு பல நூல்களைக் கற்கின்ற வாய்ப்பை இயல்பிற்