146 ஜ் குன்றக்குடி அடிகளார்
களையும் கூர்ந்து நோக்கிக் கற்றல் வேண்டும். இதனையே 'கண்டதைப் படித்தல் என்பர் நம்முடைய ஆன்றோர். இயற்கையைக் கூர்ந்து கற்றறிகின்ற அறிவியலும் நன்னூல் களைக் கற்றறிகின்ற நூலறிவும் நாமே நம்முடைய வாழ்க் கையை அன்றாடம் உய்ந்தறிந்து உணர்கின்ற பட்டறிவும் வாழ்க்கையை வளமாக்கத் துணை செய்யும். வாழ்க்கையை வளமாக்குவதற்குரிய நல்ல நூல்களுள் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும், ஜேம்ஸ் ஆலன் இயற்றிய வாழ்க்கை நூல்களும் குறிப்பிடத்தக்கன.
வாழ்க்கை வளமானதாக அமைய வலிமை வேண்டும். வலிமை இருவகைத்து. ஒன்று உடல் வலிமை. பிறிதொன்று மனவலிமை. உடல் வலிமையாவது எத்தகைய கடுமையான முயற்சிக்கும் பயன் படக்கூடிய நிலையில் உடல் அமைந்திருத்தல், உடலுக்கு வலிமை. அதை முற்றாகப் பயன்படுத்துவதன் மூலமே வந்து சேர்கிறது. பயன்படுத்தப் பெறாத உடலுறுப்புகள் வலிமை இழக்கும். உடலில் அறிவுக் கருவிகள் (புலன்கள்) ஆனாலும் சரி, செயற்கருவிகள் பொறிகள்) ஆனாலும் சரி, அவற்றைப் பயன்படுத்துவதன் மூலமே அவை வலிமை பெறுகின்றன. ஆதலால் நம்முடைய உடலுறுப்புகள் ஒவ்வொன்றையும் முறையாகச் செயற் பாட்டில் இயக்கி வலிமை சேர்க்க வேண்டும். சிந்திக்கப் பழகினால் மூளை சிறப்படையும். சிந்திப்பது எளிதான் காரியமா? கண்ணுக்குத் தெரிகின்றவற்றையே கண்டு தேர்ந்து தெளிந்து வாழ்க்கை நடத்துவதில் பயிற்சி பெறாதவர்கள் கட்புலனுக்கு வராமல் மறைவாகக் கிடக்கும் பொருள்களை - பொருள்களின் ஆற்றல்களை எங்ங்ணம் காண்பர்? அவற்றைக் காண்பதற்குச் செய்யும் முயற்சியே சிந்தனை. சிந்தனைக்குத் தடை முளைச் சோம்பல். பழைய