ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ. 147
நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், சுற்றுச் சூழ்நிலைக்கு அஞ்சுதல் ஆகியன சிந்தனைக்குப் பகைப்புலங்கள். இவற்றைக் கடந்தும் மனிதன் சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான்் வளமான வாழ்க்கை வந்தமையும்.
அடுத்து உடலை இயக்கும் தலைமை மனத்தினிடம் இருக்கிறது. மனம் இயல்பாக மிகவும் கெட்டது. அது எளிதில் எல்லாச் செய்திகளையும் சென்று பற்றும்; ஆசைப்படும்; உணர்ச்சி வசப்படும். மனத்தை, புத்தியைக் கொண்டும் சிந்தனையைக் கொண்டும் அட்க்கி ஆள வேண்டும். மனம், புத்தி சிந்தனைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்குமானால் அது மிகவும் நன்றாகப் பயன்படும். அதனுடைய அளவற்ற ஆற்றல் எண்ணற்ற சாதனைகளைச் செய்யும். மனம், கட்டுப்பாட்டின் கீழ் வர, அதற்கு ஓயாது நல்ல பணிகளைத் தந்துகொண்டே இருக்க வேண்டும். சோம்பிக் கிடக்கின்ற உடலில் உள்ள சோம்பல், மனத்தையும் பற்றுகிறது. சோம்பல் நன்மை செய்யாதது மட்டுமின்றித் தீமையையும் செய்யும். ஆதலால், வாழ்க்கை வளமாக அமைய மனதுக்கு வலிமை சேர்க்கவேண்டும்.
வாழ்க்கை, வெற்றிகள் பொருந்தியதாக அமைய வேண்டும். வாழ்க்கை ஒரு தொடர்ந்த போர்க்களம். மனிதரோடு மனிதர் பொருதும் போர்க்களத்தை நாம் குறிப்பிடவில்லை. ஆனாலும் அது விலக்கப்பட்டதாகக் கருதக் கூடாது. முதல்நிலை போர் தன்னுடைய பொறிப் புலன்களோடு ஒரு நிறை நலத்தை நோக்கிப் பயணம் செய்யும் ஆன்மா நடத்தும் போராட்டம். .
மெய்யுளே விளக்கை ஏற்றி
வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி
உகக்கின்றேன் உகவா வண்ணம்