148 இ குன்றக்குடி அடிகளார்
ஐவரை அகத்தே வைத்தீர்
அவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன்
திருப்புக லூர னிரே".
என்று இப்போராட்டத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார் அப்பரடிகள்.
பொறிகளின்மீது தனி ஆணை செலுத்தி ஆளும் தன்மையுடையவர்கள் முதலில் தங்கள் நிலையில் வெற்றி பெறுகிறார்கள். தன்னளவில் வெற்றி பொருந்திய ஓர் ஆன்மா, தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் போரிடுகிறது. அந்தப் போரின் நோக்கம் சமுதாயத் தீமைகளாகிய அறியாமையை நீக்குதல். வறுமையை நீக்குதல், பிணியை நீக்குதல், பிரிவினையை நீக்குதல். பகையை நீக்குதல் என்பதேயாம். இது நேரடியாகத் தீமையை எதிர்க்கும் போராட்டமன்று. நன்மையைப் படைப்பதன் மூலம் தீமையை அகற்றுதலே இப்போரின் நோக்கம். அதுதான்் சிறந்த போர்த்தந்திரம். அதாவது, அறிவை வளர்த்தல், வளம்பல படைத்தல், உடல் நலம் பேணல், அன்பினால் இணைந்து வாழ்தல், ஒப்புரவு நெறி பேணல், ஒருமைப் பாடுடைய சமுதாயம் காணல் ஆகிய நல்லனவற்றைப் படைப்பதில் வெற்றி பெற்றாகவேண்டும். இந்த வெற்றிகள் மண்ணகத்தை விண்ணகமாக்கும். வாழ்க்கை வளமுடன் அமைய இத்தகு வெற்றிகளைப் பெற்றுக் குவித்திடுதல் வேண்டும். இயல்பாக இந்த வெற்றிகளைப் பெற முடியாத போது தடையாக இருக்கிற தீயசக்திகளோடும் நாம் போராட வேண்டியிருப்பின் அந்தப் போரினை நிகழ்த்தவும் தயங்கக் கூடாது. தீயசக்திகளோடு சமாதான்ம் செய்து கொள்வது அறமுமன்று; பொறையுடைமையுமன்று: கண்ணோட்டமு