ஆலயங்கள் சமுதாய மையங்கள் ; 149
மன்று. அது கடமை தவறிய மாபாதகச் செயல் என்பது அறிக. இத்தகைய செருக்களங்களில் நமது வழிபடும் கடவுள்களே போரினை நிகழ்த்தித் தீயோரை ஒடுக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால், தீமைகள் மாற்றப்பட்டனவே தவிர, தீயோர் அழிக்கப்படவில்லை; நம்மிடம் பொருது வோர் அழிக்கப்படுதலை விட அவர்கள் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வந்து பயன்படுமாறு செய்தலே சிறந்த வெற்றி. இத்தகு வெற்றிகளே வாழ்க்கை வளமாக அமையத்துணை செய்யும்.
மானுடத்தின் வரலாறு தொடர்ந்து நிகழ்வது. நேற்று மானுடம் வாழ்ந்தது உண்மை. அதுபோலவே நாளை மானுடம் வாழப்போவதும் மறுக்க முடியாத உண்மை. இந்த நீண்ட நெடிய மானுடத்தின் வரலாற்றில் நிகழ்காலத்தில் வாழ்பவர்கள், சென்ற கால வரலாற்றின் ஈட்டங்களை இழக்காமல் பாதுக்காக்கவேண்டும்; இழப்புகளை ஈடுசெய்ய வேண்டும். தம் வாழ்நாட்கால அளவுக்கு வளர்த்துக் கொண்டு வந்து தந்துள்ள வளத்தை- நாகரிகத்தைப் பாது காக்கவேண்டும். அதோடு காலத்தினால் தேவைப்படும் புதியனவற்றைச் சேர்த்து வளப்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறையைத் தோற்றுவிப்பதன் மூலம் மானுடத்தின் வரலாற்றுக்குத் தொடர்ச்சி தர வேண்டும். இதற்குத் தேவை நன் மக்கள். மனையறம் வாழ்வோர் அனைவருக்கும் மக்கட்பேறு இயற்கை. ஆனால், நன்மக்கட்பேறு, மனை நலத்தில் சிறந்தோர்க்கே உரியது. -
"மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கள் பேறு”
என்பது திருக்குறள்.
-11