ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 151
உணவிற் சிறந்தவை காய் கனிகளும் பருப்பு வகைகளுமாம். இவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கக்கூடிய வாழ்க்கை வளமானதாகும்.
இக்கருத்தினைக் கொண்டுதான்் திருக்குறள் பொரு ளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று கூறியது. இங்கு கூறிய பொருள்கள் நுகர் பொருள்களேயாம் என்பதை அறிக. ஒரோவழி பொன்; நாணயம் என்று கொண்டாலும் பிழை யில்லை. பொருள் முட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை புதிய ஊக்கத்தினையும் திறன்களையும் தரும். பொருள் வளம் பெறாத வறுமை வாழ்க்கை அறிவை இழக்கச் செய்வதுடன் நற்குணங்களையும் இழக்கச் செய்யும். இந்தியா ஒரு வளர்ந்த நாடாக இருந்தாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிற வர்கள் எண்ணிக்கையும் மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கிறது.
அதனால், நம்முடைய அறிவியல் திறனும் உழைக்கும் மக்கள் திறனும் வீணாகிப் போகின்றன. நாட்டின் ஒட்டு மொத்தமான பொருளியல் நிலை ஒவ்வொருவரையும் பாதிக்கும் - வாழ்க்கை வளமாக அமைய, நாடு வளமாக அமைய வேண்டும். பொருள்வளம் நிறைந்த வாழ்க்கையே வளம் நிறைந்த வாழ்க்கை. அதனால் செய்க பொருளை என்ற திருக்குறளின் ஆணையை ஏற்று, ஊக்கம் உடை யோராக ஆக்கத்திறனைத் தேடி அடைவோமாக. பொருள் வரும் வாயில்களைக் கண்டு, இயற்றி, ஈட்டி, காத்து, காத்த பொருளை முறையாக வகுத்துச் செலவிட்டு வாழ்வில் வளம் காண்போமாக.
நம்முடைய நாட்டு வாழ்க்கையில் ஊழ்த் தத்து வத்தைப் பற்றிய நம்பிக்கை நிலை பெற்றிருக்கிறது. ஊழ்த்தத்துவ நம்பிக்கையில் நன்மையும் விளைகிறது.