152 ஜீ குன்றக்குடி அடிகளார்
தீமையும் விளைகிறது. ஒரோ தத்துவத்தின் அடிப்படையில் நன்மையும் தீமையும் எப்படி விளைய முடியும்? இதற்குத் தத்துவம் காரணமல்ல. தத்துவத்தை நாம் அணுகும் முறையே காரணம். ஊழ, உயிரின் சிந்தனை, செயல்களின் வழிப்பட்ட வழக்கங்களின் வழி வருவது. உயிர் மேற்கொண்டொழுகிய வழக்கங்களின் சுவடுகள் உயிரிடத்தில் தங்கி, வாழ்நிலை தோறும் முகிழ்த்து வெளிப்படுவது ஊழ். ஊழ் மாற்றத்திற் குரியதேயாம். அறிவியல் ஆற்றலில் புத்துணர்வில் புதிய உழைப்பில் வளர்ச்சியடைந்து மாற்றங்களைப் பெற்று வரும் ஆன்மாவின் முன்னே நேற்றையப் பழக்க வழிப்பட்ட ஊழ் நிற்றல் அரிது. ஊழ் உருக்கொண்ட காலத்திலும் இன்று வாழும் காலம் வளர்ச்சித் தன்மையுடையது. நாள்தோறும் தேக்க நிலையில் கிடக்காமல் சிந்தனையில் செயலில் சிறந்து வளர்ந்துவரும் ஆன்மா ஊழினை வெற்றி கொள்ளும். நாள்தோறும் நாம் முயன்று செயற்படுவதன் மூலம் நல்லுழைப் படைக்க வேண்டும். புதிய முயற்சிகளின் மூலம் சென்ற கால இழஆழையும் கூட ஆகூழாக மாற்ற வேண்டும். இத்தகு நம்பிக்கையும் முயற்சியுமே வளம் சிறந்த வாழ்க்கைக்குத் துணை செய்ய முடியும்.
இங்ங்ணமின்றி ஊழ் மாற்ற இயலாதது தாம் இப்படியேதான்் இந்தத் துன்பத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்ற மாறா விதிகளில் நம்பிக்கையுடையவராக வாழ்தல், ஊழ்த்தத்துவத்தால் விளையும் தீமையாகும். இடைக்காலத்தில் இந்தத் தீமை நம்முடைய சமுதாயத் தினரில் பெரும்பான்மையோரைப் பற்றியிருக்கிறது. அதனா லேயே நம்முடைய சமுதாயம் எழுந்திருக்க முடியாமல் படுத்துக்கிடக்கிறது. இத்தகைய முட நம்பிக்கைகள் விளைவித்ததே வறுமைக்கோடு, தீண்டாமை முதலிய