பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தி குன்றக்குடி அடிகளார்

இயற்கையே அழகு. இயற்கையில் அழகைக் கண்டு அழகுக்கு அழகாக நிற்கும் இறைவனை வணங்கிய ஞானிகள் உண்டு.

"பார்க்கின்ற மலருடும் நீயேயிருத்தி, அப் பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்"

என்றார் தாயுமானவர். உடம்பை அழகாகப் பேணி வைத்துக் கொள்ளவேண்டும். உழைக்கும் உடம்பு இயல்பாகவே அழகு பெறும். அளவான உழைப்பும் மிதமான நுகர்வும் கொள்வோர் உடல், என்றும் அழகாக இருக்கும். நோயின்மை அழகுக்கு அரண். சிரித்து மகிழ்ந்து வாழ்தலும் அழகுக்குத் துணை செய்யும். விருப்பு, வெறுப்புகளிலிருந்தும் காய்தல் உவத்திலிலிருந்தும் விடுபட்டு நடுநிலை நின்று ஒழுகுவார் அழகு பெறுவர். உடல் அழகுக்குச் சித்தமும் அழகாக இருக்க வேண்டும். அதாவது சிந்திக்கும் உறுப்பு நல்ல சிந்தனை களைச் சிந்திக்க வேண்டும். "சித்தம் அழகியார்' என்று திருவாசகம் ஒதும். அழகு ஆயிரம் காரியத்தைச் சாதிக்கும். ஆதலால், அழகைப் பேணுவோமாக! பூச்சுக்களால் - ஒப்பனைகளால் பெறுவது இயற்கை அழகன்று. இயற்கை யழகே அழகு. அழகு, அகநிலையிலும் புறநிலையிலும் வளமான வாழ்க்கையைப் படைக்கும். எண்ணிய எண்ணி யாங்கு எய்தத் துணை செய்யும். வீட்டை அழகுபடுத்துங்கள்! ஊரை அழகு படுத்துங்கள்! அழகான தோற்றத்தினை அடையுங்கள்! சிந்தையில் அழகு போற்றுங்கள்! வளமான வாழ்வு அமையும்.

வளமான வாழ்க்கைக்குப் பெருமை வேண்டும். பெருமையாவது மற்றவர்கள் புகழ்ந்து போற்றத்தக்க பெருந் தன்மையுடையோராக வாழ்தல். பெருந்தன்மையாவது சிறியன சிந்தியாமை, சின்னத்தனமான காரியங்கள் செய் யாமை, மற்றவர்க்குத் தீங்கு செய்யாமை, புறங் கூறாமை, மற்றவர்பால் குற்றங்காணுதலைத் தொழிலாகக் கொள்