ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ: 159
அடுத்து, முறையாகக் குறித்த காலத்தில் உடலுக்கு நலம் பயக்கும் உணவை உண்ணவேண்டும். உடலுக்கு, இயற்கை அன்னை தரும் உணவு நல்லது. உணவில் அரிசியைக் குறைத்து, காய், கனி, கீரை, பருப்பு வகைகளை மிகுதியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய உணவை, உடலின் தேவை கருதி உண்ண வேண்டும். உடலின் தேவையாவது உயிர் வாழ்தலுக்குரிய அடிப்படைத் தேவை. உழைப்புக்கேற்ற உணவு உண்ண வேண்டும். உடலுக்குத் தீங்கு பயக்கும் குடித்தல், புகைத்தல் போன்ற வற்றை அறவே விலக்க வேண்டும். உடல் நிலையைப் பாதிக்கக் கூடிய உணர்ச்சிகளைக் கொள்ளுதல் கூடாது. விருப்பு-வெறுப்பு, சினம், பதற்ற நிலையடைதல் ஆகியன வாழ்க்கைக்குத் துணை செய்யாதவை. காரிய சாதனைக்கும் கூட ஆகாதவை. நோயின்றி வாழ்தல் வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாதது. உடலை அலட்சியப்படுத்தக்கூடாது. "உடம்பார் அழியின் உயிரார் அழிவார்' என்ற திருமத் திரத்தை அறிக. உடலை வளர்த்து உயிரை வளர்த்திடுக! காற்றும் கதிரொளியும் எளிதில் புகுந்து வெளியேறும் இடத்தில் இருந்து பணி செய்திடுக. நோயின்மைக்கும் இளமைக்கும் முதுகுத் தண்டின் நலம் இன்றியமையாதது. ஆதலால் எப்பொழுதும் நேர் நிற்றல், நிமிர்ந்து நிற்றல், நிமிர்ந்த நிலையில் அமர்ந்து பணி செய்தல் ஆகிய நிலைகளை மேற்கொள்க!
நாள்தோறும் உடலுக்கு உழைப்பினைத் தருக! நன்றாகத் துரங்கக் கற்றுக் கொள்க! நல்ல தூக்கம், உடலியக்கத்தைப் புதுப்பிப்பது. புத்துணர்வுக்கும் புத்துழைப் புக்கும் உடலை ஆயத்தப்படுத்துவது. நல்ல எண்ணங்