பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 16t

அமைதியும் சாந்தமும் தழுவிய அணுகுமுறை இதயத்தைப் பாதிக்காமல் காப்பாற்றும். வாழ்நாளைச் செயற்கை முறையில். தற்கொலை மூலமோ, கொலை மூலமோ குறைப்பது பாபம். அதுபோலவே வாழ்நாளை அற்பமாகக் கருதுவதும், "நாம் வாழ்ந்து என்ன ஆகப் போகிறது?’ என்று எண்ணுவதும் பிழை. அதே போழ்து ஒன்றை நினைவிற் கொள்ளுதல் வேண்டும். மிக அதிகமான நாடகள் வாழ்ந்தால் மட்டும் போதாது. வாழும் நாள் அளவும், பயன்பாடுடை யதாக அமைய வேண்டும். பயன்பாடிலாத ஊன் பொதி சுமக்கும் வாழ்க்கை, ஆண்டுகள் பலவாய் அமைந்து என்ன பயன்? ஆக, வளமான வாழ்க்கை பெற "வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்ற திருமாறை வாக்குப்படி வாழ்க்கையை மதித்து வாழ்வாங்கு வாழ்ந்திடக் கற்றுக் கொள்ள வேண்டும்.

முன் கூறிய பதினாறு டேறுகளும் அமைவதற்கு மனித வாழ்வில் சால்பு அடிப்படையாக இருக்க வேண்டும். அதாவது சான்றாண்மை நிறைந்த வாழ்க்கை வேண்டும். சான்றாண்மையாவது. பல நற்குணங்களும் நிறைந்து, அவற்றை வாழ்க்கையின் துறைதொறும் ஆளுமையுடன் செயற்படுத்துதல். இத்தகு சான்றாண்மை - - வளமான வாழ்க்கைக்குச் சான்றாக அமையும். இத்தகைய சான்றாண் மைக்கு அடித்தளமாக அமைவது அன்பு,

"அன்பின் வழியது உயிர்நிலை" என்றும் "அன்போடி யைந்த வழக்கென்ப ஆயிருர்க்கு என் போடியைந்த தொடர்பு" என்றும் வள்ளுவம் கூறும். ஒருவர் உயிருடை யவரா என்பதை அறிவதற்கு, அவர் தம் நடமாட்டங்கள் அளவு கோலல்ல. அவர்தம் வாழ்க்கையில் அன்பு நிறைந்த செயல்கள் காணப்படின் அவர் உயிருடையவர் என்று